நெஹ்ரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

நெஹ்ரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

/ Thursday, 12 October 2017 10:57

இந்தியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவரின் சொந்த டெல்லி மைதானமான பெரோஷா கொட்லா மைதானத்தில் நவம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள போட்டியோடு ஓய்வு பெறுவதாக நெஹ்ரா அறிவித்துள்ளார்.

1999ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலமாக ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேசக் கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்டார்.

பல உபாதைகள் இவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட முடியாதவாறு தடை செய்தன. 2004 ஆம் ஆண்டின் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இவர் விளையாடவில்லை.

2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரை இறுதிப்போட்டியின் பின்னர் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியமையை தொடர்ந்து இந்தியா 20-20 அணியில் தொடர்ச்சியான இடம் பிடித்து வருகின்றார்.

38 வயதான நெஹ்ரா 17 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 120 ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் 157 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 26 இருபதுக்கு-20 போட்டிகளில் 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

ஆஷிஷ் நெஹ்ரா பன்னிரண்டு தடவைகள் சத்திரசிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please publish modules in offcanvas position.