23 அணிகள் உலகக்கிண்ண தொடருக்கு தெரிவு

23 அணிகள் உலகக்கிண்ண தொடருக்கு தெரிவு

/ Wednesday, 11 October 2017 09:47

ரஷ் யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள காற்பந்தாட்ட உலகக்கிண்ண தொடரில் விளையாட இதுவரை 23 அணிகள் தெரிவாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற போட்டிகளினடிப்படையில் மேலும் 6 அணிகள் தெரிவாகியிருக்கின்றன. கடந்த ஐந்தாம் திகதி முதல் நடைபெற்ற போட்டிகளினடிப்படையில் இந்த அணிகள் தெரிவாகியுள்ளன. நேரடி தகுதிபெறும் அணிகள் ஆசிய, ஐரோப்பிய மற்றும் தென்னமெரிக்க வலையங்களில் இருந்து தெரிவாகிவிட்டன.

ஆர்ஜன்டீனா அணி உலகக்கிண்ண தொடருக்கு தகுதிபெறாமல் போகும் சந்தர்ப்பங்கள் இருந்த நிலையில், அவர்கள் பெற்றுக்கொண்ட வெற்றியும், மற்றைய அணிகள் அடைந்த வெற்றி தோல்விகளும் அவர்களுக்கு அதிஷ்ட வாய்ப்பை வழங்கியுள்ளது.

அத்துடன் ஐரோப்பா கண்டத்தில் பலமான அணிகளான போர்த்துக்கல், பிரான்ஸ் அணிகளும் நேரடி வாய்ப்பை பெறும் சந்தர்ப்பம் குறைவாக இருந்த நிலையில் அவர்களது வெற்றிகள் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

உலகக் கிண்ண தொடருக்கு ஐரோப்பிய கண்டத்திலிருந்து கூடிய அணிகளாக 13 அணிகள் தெரிவு செய்யப்படும். அவற்றில் 9 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. ஒன்பது குழுக்களிலிம் முதலிடதத்தை பெற்ற அணிகள் தெரிவாகியுள்ள அதேவேளை ஒன்பது குழுக்களிலிருந்தும் சிறந்த இரண்டாமிட எட்டணிகள் அடுத்த சுற்றில் விளையாடி அவற்றில் நான் அணிகள் உலகக் கிண்ண வாய்ப்புகளை பெறும்.

முக்கிய அணிகளில் ஒன்றான நெதர்லாந்து அணி இம்முறை உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது. கடந்த உலகக்கிண்ண தொடரில் நெதர்லாந்து அணி பிரேசிலில் வைத்து பிரேசில் அணியை வென்று மூன்றாவது இடத்தைப் பெற்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.

சுவீடன், சுவிற்சர்லாந்து, வட அயர்லாந்து, அயர்லாந்து, டென்மார்க், இத்தாலி, கிரீஸ், குரேசியா ஆகிய அணிகள் இரண்டாம் சுற்றுப்போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்தப்போட்டிகள் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளன. பெல்ஜியம், ரஸ்சியா, இங்கிலாந்து, ஜேர்மனி, போலாந்து, ஸ்பெய்ன், போர்த்துக்கல், பிரான்ஸ், ஐஸ்லாந்து, சேர்பியா ஆகிய அணிகள் போட்டிகளின்படி தெரிவாகியுள்ள அதேவேளை, ரஸ்சியா போட்டிகளை நடாத்தும் நாடு என்ற அடிப்படையில் தகுதி பெற்றுள்ளன.

தென்னமெரிக்கா கண்டத்திலிருந்து ஏற்கனவே பிரேசில் அணி தெரிவாகியிருந்த நிலையில் ஆர்ஜன்டீனா, உருகுவே, கொலம்பியா அணிகள் நேற்றைய போட்டிகளின் முடிவுகளின் படி தெரிவாகியுள்ளன.

லயனல் மெஸி ஹட்ரிக் கோலடித்தது தனது அணியை உலகக்கிண்ண தொடருக்கு அழைத்து சென்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

பிரேசில் அணி 41 புள்ளிகளையும், உருகுவே அணி 31 புள்ளிகளையும், ஆர்ஜன்டீனா அணி 28 புள்ளிகளையும், கொலம்பியா அணி 27 புள்ளிகளையும் குழு நிலையில் பெற்று உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

ஐந்தாமிடத்தை பெற்றுள்ள பெரு அணி, ஓசியானியா வலைய வெற்றி அணியுடன் மோதும் போட்டிகளில் வெற்றிபெறும் அணி உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெறும்.

வட, மத்திய அமெரிக்கா கரீபியன் வலைய அணிகளில் நேற்றைய போட்டிகளின் முடிவுகளின் படி பனாமா அணி மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

குழு நிலைப்போட்டிகளில் 31 புள்ளிகளுடன் மெக்சிகோ அணி முதலிடத்தையும், கொஸ்டாரிகா அணி 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், பனாமா அணி 13 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன. இந்த மூன்று அணிகளும் உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை நான்காமிடத்தை பெற்ற ஹொன்டியூராஸ் அணி ஆசிய வலைய தெரிவுகாண் வெற்றி அணியான அவுஸ்திரேலியா அணியுடன் மோதி வெற்றிபெறும் அணி உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெறும்.

ஆபிரிக்கா வலையத்திலிருந்து ஐந்து அணிகள் தெரிவாகுமென்ற நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி நைஜீரியா மற்றும் எகிப்து அணிகள் உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

ஆசிய வலையத்திலிருந்து, ஈரான், ஜப்பான், வட கொரியா, சவுதி அரேபியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுளளத்தோடு சிரியா அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதற் போட்டி 1-1 என்ற சமநிலை முடிவிலும், இரண்டாம் போட்டியில் 2-1 என்ற வெற்றியை அவுஸ்திரேலியா அணி பெற்றுள்ள நிலையிலும் அவுஸ்திரேலியா அணி பெரு அணியுடனான தகுதிகாண் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள போட்டிகளோடு மீதமுள்ள ஒன்பதணிகளும் உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுவிடும்.

Please publish modules in offcanvas position.