இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு தீர்வாகாது

உத்தேச அரசமைப்பில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமாயின் அது தமிழ் இனவாதிகளுக்கு அதிகாரங்களை தரும் செயலாகவே அமையும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். பிரிவினைவாதம் என்ற பேராபத்து நாட்டை விட்டு முற்று முழுதாக அகன்று விட்டதாகக் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"சுடர் ஒளி'க்கு வழங்கிய நேர்காணலில் இக்கருத்துக்களைத்தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டு ஜே.வி.பி தலைமையிலான மக்கள் அரசு ஒன்றை நிறுவுவதே பிரதான இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

கேள்வி: தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: எமது நாடு இன்று அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியில் பெரும் பின்னடைவினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றம் குறித்து எமது மக்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டிருந்தனர். ஜனநாயகத்தினை வலுப்படுத்தவும், ஊழல்களை ஒழிக்கவும் நல்லாட்சியை உருவாக்கவும் மக்களின் சில உரிமைகளை வென்றெடுக்கவும் இந்த ஆட்சி மாற்றம் உதவும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கைகள் முழுமையாக தகர்ந்து விட்டன. அரசில் நிகழ்ந்த பாரிய ஊழல், மோசடிகள் குறித்து சட்டரீதியிலான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. அத்துடன் புதிதாகவும் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தவிர நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்கி சிறந்த ஜனநாயக சமூகத்தினை உருவாக்கவும், நாட்டின் அனைத்து மக்களுக்கு சம உரிமைகள் கிடைப்பது குறித்தும் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், இந்த நடவடிக்கைகளும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதனை காணமுடியாதுள்ளது. பொதுவாகக் கூறுவதானால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக ரீதியில் பின்னடைவு கண்டுள்ளனர். நம்பிக்கைகள் தளர்ந்த நிலையில் உள்ளனர்.

கே: உத்தேச அரசமைப்பு குறித்து சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இந்த சர்ச்சைகள் மத்தியில் நாட்டுக்கு புதிய அரசமைப்பு ஒன்றுதேவை என்று கருதுகின்றீர்களா?

ப: புதிய அரசமைப்பு நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக நாட்டின் இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு தீர்வாக அமையும் என்று நாங்கள் கருதவும் இல்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஓர் ஆரம்பத்தினை புதிய அரசமைப்பு மூலம் ஏற்படுத்தி கொள்ள முடியும். எமது நாட்டில் உள்ள பிரச்சினை என்னவென்றால் 2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தினை உறுதிப்படுத்தும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசமைப்பினை உருவாக்குவதாக தெரிவித்திருந்தார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும், நாடாளுமன்றத்தை அரசமைப்பு சபையாக மாற்றி அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்று புதிய அரசமைப்பு ஒன்றினை முன்வைப்பதாகத் தெரிவித்திருந்தார். 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு எதிரான, 19 தடவைகள் திருத்தத்திற்குள்ளான அரசமைப்பினை விட அதிக ஜனநாயக தன்மை கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்கிய புதிய தேர்தல் முறையினைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் உரிமைகள் கொண்ட புதிய அரசமைப்பு ஒன்றினை முன்வைப்பதே நன்று. இந்தநோக்கத்திற்காக தான் நாம் புதிய அரசமைப்பை ஆதரிக்கின்றோம்.

கே: புதிய அரசமைப்பில் அதிகாரப்பகிர்வு குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. அதிகாரப் பகிர்வு குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன?

ப: இலங்கையில் பிரிவினைவாத இயக்கம் ஒன்று இருந்ததனை மறந்து விட முடியாது. நாட்டைப் பிளவுபடுத்தி தமிழ் ஈழம் ஒன்றை உருவாக்கும் நோக்கம் கொண்ட அரசியல் இயக்கம் ஒன்று இருந்ததையும் மறந்து விட முடியாது. இதனால் நாங்கள் எப்பொழுதும் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்களின்போது மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம். எச்சரிக்கையாக இருப்போம். எமது நாட்டில் மக்களுக்கு உரிமைகள் வழங்குவதில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டைப் பிளவுபடுத்தி தனி அரசை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கக்கூடாது என்பது குறித்து நாங்கள் விழிப்புடன் இருக்கின்றோம். இதனால் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு நாங்கள்முட்டுக்கட்டையாக இருப்போம். நாட்டைப் பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் நாம் எதிர்ப்போம். அதிகாரப் பகிர்வினை எதிர்க்கின்ற போதிலும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நாட்டைப் பிளவுபடுத்தாமல் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே எமதுநிலைப்பாடு.

ஒவ்வொரு இனத்திற்கும் உரிய விசேட பிரச்சினைகள் தொடர்பில் விசேட தீர்வுகள் தேவை. அவரவர் கலாசார அடையாளங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். இங்கு அதிகாரப் பகிர்வு என்ற சொற்பிரயோகத்தினை விட மக்களுக்கு சம உரிமைகள் கிடைக்கக் கூடிய வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் அபிப்பிராயம். நாட்டைப் பிரிக்காமல் மக்களுக்கு சம உரிமைகளைப் பெற்றுத் தரும், நிர்வாகப் பணிகளை கீழ் மட்டம் வரை பரவச் செய்யும் நிலைமையை அரசமைப்பின் மூலம் உருவாக்க முடியுமாயின் அது சிறந்தது என்றேஎமது கட்சி கருதுகின்றது. இதுவே எமது நிலைப்பாடு.

கே: ஆனால், புதிய அரசமைப்பு பற்றிய பேச்சுக்களுடன் வடக்கு, கிழக்குக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்ற கோரிக்கை வலுப்படும் நிலைமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளதல்லவா?

ப: வடக்கு, கிழக்கில் வாழும் மக்களைப்பற்றி பேசும்போது அவர்களின் மனநிலை அதுவல்ல. ஏனெனில் நாங்கள் வடக்கில் பல அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளுக்கு நாம் சென்றிருந்தோம். அங்கு பொது மக்களை சந்திக்கக் கூடியதாக இருந்தது. அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு காணிகள் இல்லை. தண்ணீர்ப் பிரச்சினை காணப்படுகின்றது. மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பழைய குடியிருப்பாளர்களின் காணிகளில் வேறு சிலர் குடியேறியுள்ளனர். இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு பார்க்கும்போது அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது பிரச்சினையே அல்ல. அன்றாட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் கோரிக் கையாக உள்ளது.

அதிகாரப்பகிர்வு என்றசிந்தனை அரசியல்வாதிகளிடமே காணப்படுகின்றது. அதிகாரப் பகிர்வு என்றசொற் பிரயோகத்தினை ஒருபக்கம் வைத்துவிட்டு வடபகுதி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. ஊதாரணமாக மொழிப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் தமிழ் மொழியில் தனது பணிகளை நாடு முழுவதும் மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தவேண்டும். அத்துடன், இன, மதம் என்ற ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதனையும் நாங்கள் எதிர்க்கின்றோம். இனவாத ரீதியில் மற்றொரு இனத்தினை அடிமைப்படுத்துவதனையும் நாங்கள் எதிர்க்கின்றோம். அதற்கான சட்ட வசதிகள் அரசியலமைப்பில் இருத்தல் வேண்டும்.

தமிழ் மக்கள் அன்றி அரசியல்வாதிகள் தான் தமது அரசியல் நலன்களுக்காக அதிகாரப் பகிர்வு குறித்து அதிகம் பேசுகின்றனர். அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் மட்டும் இந்த பிரச்சினை தீரப்போவதில்லை. மாகாண சபைகளுக்கு ஓரளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கில் மாகாண சபை ஒன்று இயங்குகின்றது. வட மாகாண சபை குறித்து அம்மக்களின் அபிப்பிராயம் என்ன என்று வினவிப் பாருங்கள். கடும் எதிர்ப்புத் தான் அந்த மக்களிடம் காணப்படுகின்றது. வட மாகாண சபையிலும் ஊழல், மோசடிகள் இடம் பெறுகின்றன. அரச நிதி ஒதுக்கீட்டினை அவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை. அபிவிருத்திப் பணிகளில் அவர்கள் முழுமையாக ஈடுபடவில்லை. அங்கு அதிகாரத்திற்கான உட்பூசல் நிலவுகின்றது. இதன்படி முதலாளித்துவ ஏகாதிபத்தியவாத தலைவர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ஆனால், அரசமைப்பின் மூலம் மக்களின்உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமாயின் அதனை பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்த முடியுமாயின் வட பகுதி மக்களின் பலபிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று கருதுகின்றோம்.

கே: மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் மக்களின் பல நடைமுறை வாழ்வியல்சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று நீங்கள் கருதவில்லையா?

ப: இல்லை. முதலாளித்துவ முறையில் எவ்வளவுதான் அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. உதாரணமாக தென்னிலங்கையில் இருந்த ஜனாதிபதிகளிடம் அதீத அதிகாரம் பலம் இருந்தது. ஏன் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த அதிகாரத்தினைப்பயன்படுத்தி அவர்கள் நாட்டின் எந்த பிரச்சினையை தீர்த்து வைத்தார்கள்? அரசியல் தலைவர்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அரசமைப்பில் தலைவர்களுக்கான அதிகாரம் அன்றி பொது மக்களுக்கான உரிமைகளே உறுதி செய்யப்படல் வேண்டும். மனித உரிமைகள், அடிப்படை மனித சுதந்திரம், பொருளா தார சமத்துவம், கலாசார சமத்துவம், மொழிசமத்துவம் என்பன அரசமைப்பில் உறுதி செய்யப்படல் வேண்டும். மக்கள் சுதந்திரமாக இவற்றை அனுபவிக்க வேண்டும். இவற்றை அனுபவிக்கும்போது தாமும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற உணர்வு ஏற்படும். பிரிந்து செல்லும் எண்ணம் இருப்பின் அந்த மனநிலையும் இதனால் மாறுபடக் கூடும். இப்பொழுது அவ்வாறான எண்ணம் இருக்கின்றதாக நான் கூற வரவில்லை. ஆனால், நாட்டைப்பிரிப்பதற்கான பாதைகள் அமைக்கப்படு மாயின் அதனால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

கே: ஒருமித்தநாடு, ஒற்றையாட்சி என்ற சர்ச்சைகள் பற்றியும் பேசப்படுகின்றனவே?

ப: ஒருமித்தநாடு என்பது பிரிந்து வேறுபட்டு இருந்த அரசுகளை ஒன்றிணைப்பதனைக் குறிக்கும். ஒற்றையாட்சி என்பது பிரிவதற்கு முன்னரான நிலைமை. நாட்டின் முக்கிய மாற்றங்களை நாட்டின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்துடன்தான் மேற் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், எமது நாட்டில் ஒற்றையாட்சி என்ற சொல் ஒரு நாடு என்ற ரீதியில் தான் பயன்பாட்டில் உள்ளது. இதனை நாம் விலக்கி கடந்து செல்லவும் முடியாது. ஆனால், ஒரு நாடு என்ற சொற் பிரயோகத்தினைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதனையும் அனுமதிக்க முடியாது. ஒற்றையாட்சி, சமஸ்டி ஆகியவற்றை வார்த்தைப் பிரயோகங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அரசியல் மோதல்களை நடத்துவது அர்த்தமற்றது. என்னைப் பொறுத்தவரையில் வடக்கு மக்களும் ஒற்றையாட்சி என்ற விடயத்துடன் முரண் நிலையை கொண்டிருக்கவில்லை. ஏனெனில், இவற்றை புரிந்து கொண்டு இவ் விடயத்தில் நாங்கள் மிகவும் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மாறாக ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டினுள் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைப்பதற்கு வழி செய்ய முயற்சிக்க வேண்டும்.

கே: ஒருமித்த நாடு என்பதை ஏன் ஜே.வி.பியினால் ஏற்க முடியாது?

ப: அனைவரும் அதிகாரங்களுக்காக போராடுகின்றனர். அதிகாரத்துக்கான போராட்டத்தில் மக்கள் மத்தியில் இனவாதத்தினைப் பரப்பும் நடவடிக்கையினை அரசியல் வாதிகள் மேற்கொண்டிருக்கின்றனர். விக்கினேஸ்வரன் போன்றவர்கள் தமிழ் இனவாதத்தினைத் தூண்டிக் கொண்டிருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ சிங்கள இனவாதத்தினைத் தூண்டிக் கொண்டிருக்கின்றார். சிங்கள இனவாதம் தூண்டப்படுவதன் நலன்கள் விக்கினேஸ்வரன் போன்றவர்களையே சென்றடையும். சிங்களவர்கள் ஒன்றும் தருகிறார்கள் இல்லை. அதனால் நாங்கள் பிரிந்து செல்லப் போகின்றோம் என்பர்.
ஒன்றுபட வேண்டியது நாடு அல்ல மக்கள் என்றே நான் நினைக்கின்றேன். இதனால் ஒருமித்த நாடு என்ற பதத்தினை சேர்க்கும் போதுபல அரசியல் நெருக்கடிகள் உருவாகும் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

கே: அவ்வாறாயின் சமஸ்டி ஒருபோதும் இலங்கைக்கு தேவையில்லை என்ற நிலைப்பாடு தான் உங்கள் இறுதி நிலைப்பாடா?

ப: சமஸ்டி என்று கூறும் போது அது பிரிந்து செல்வதற்கான வாய்ப்பினைக் கொண்ட அரசுகளின் கூட்டாகவே கருதப்படுகின்றது. எமது நாட்டின் வரலாற்று நிலைமைகளின் அடிப்படையில்தான் நாம் எமது நாட்டுக்குரிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 2008, 2009களில் தனி நாட்டுக்கான யுத்தம் ஒன்று இங்கு நடைபெற்றதனை நாம் மறந்து விடக்கூடாது. அதன் காயங்கள் ஆறவில்லை. வடுக்கள் மறையவில்லை. சந்தேகங்களும் தீர்ந்தபாடும் இல்லை. இவ்வாறான அரசியற் சூழ்நிலையில் இவ்வாறான கோட்பாடுகளை முன்வைக்கும் போது அவ்வாறான சந்தேகங்களுக்கு உயிரூட்டும் நிலையே ஏற்படும்.

சமஸ்டி என்ற விடயத்துடன் எங்களால் உடன்படவே முடியாது. நாட்டைப் பிரிக்காமல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனையே நாங்கள் விரும்புகின்றோம். இவ்வாறு சர்ச்சைக்குரிய சொற்களைப் பயன்படுத்தும்போதுதான் புதுப் பிரச்சினைகள் உருவாகின்றன. இவற்றை எவ்வாறு ஒவ்வொருவரும் புரிந்து கொள்கின்றார்கள் என்பதிலும் பிரச்சினைகள் உள்ளன. ஜேர்மனியில் சமஸ்டியை விளங்கிக்கொண்ட விதமும் இலங்கையில் விளங்கிக் கொண்ட விதமும் வெவ்வேறானவை. எமது நாட்டு மக்களின் மனநிலையில்அடிப்படையில் சமஸ்டி என்பது தனி நாட்டுக்கான பிரிந்து செல்லும் உரிமையையே குறிக்கின்றது. எமது நாட்டுக்கு மக்களுக்கு சம உரிமைகள் கிடைக்கக் கூடிய அரசமைப்பு தான் தேவை. பல பெயர்களினால் அழைக்கப்படும் அரசமைப்பு என்பது அர்த்தமற்றது. இலங்கையின் அரசமைப்புக்கு ஜனநாயக சோசலிச அரசமைப்பு என்ற பெயர் உள்ளது. இவ்வாறு பெயர் இருந்ததன் பலன் என்ன? ஜனநாயகமும் இல்லை. சோசலிசமும் இல்லை. எனவேதான் அனைத்து மக்களினதும் விருப்பத்திற்குரிய அரசமைப்பினை உருவாக்க வேண்டும் என்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும்.

கே: தற்பொழுது காணப்படும் அரசியல் சூழ்நிலையில் சர்ச்சைகளையும், தடைக ளையும் தாண்டி இலங்கை மக்கள் புதிய அரசஅமைப்பு ஒன்றை பெற்றுக் கொள் வார்கள் என்பதில் ஜே.வி.பிக்கு நம்பிக்கை உள்ளதா?

ப: இனவாதிகளும் அடிப்படை வாதிகளும் உத்தேச அரசஅமைப்புக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒருகட்சியாக எமக்கு இது ஒரு சாதகமற்ற நிலைமையாகும். எனினும், நாம் புதிய அரசமைப்பினை நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கும்முயற்சிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. புதிய அரசமைப்புக்கான முயற்சிகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றபோதிலும் புதிய அரசமைப்பு கிடைக்கும் என்பதனையும் உறுதியாகக் கூற முடியாது. அதற்கான முயற்சிகளில் ஒரு கட்சியாக நாங்கள் பங்களிப்பு செலுத்துவோம். இடையூறு விளைவிக்க மாட்டோம். மேலும் தற்பொழுது புதிய அரசமைப்பு தொடர்பில் இடைக்கால அறிக்கையே வெளியாகியுள்ளது. இனவாதிகள் அதில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களை முன்னிலைப்படுத்தி தனது அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர். இதனால் தான் பிக்குகளும், இதரதரப்பினரும் புதிய அரசமைப்பு தேவையில்லை என்கின்றனர். தெளிவற்ற நிலைதான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று நாங்கள் கருதுகின்றோம். சரியான முறையில் விளக்கம் அளிக்கும்போது அவர்களுக்கு இந்த குழப்பங்கள் தீரும். அந்த பணியினைசெய்யக் கூடியவர்களும் யாரும் இல்லை. புதிய அரசமைப்புக்கு எதிரானவர்களே அதிகம் பேசுகின்றார்கள். இங்கு இது தான் பிரச்சினை. புதிய அரசமைப்பின் யதார்த்தத்தினை தெளிவுப படுத்தி மக்கள் மத்தியில் சரியான புரிதலை ஏற்படுத்துவதில்அரசும் தோல்வி கண்டுள்ளது. இந்தப் பொறுப்பு அரசிற்குரியது. அந்த பொறுப்பினை அரசு சரிவரநிறைவேற்ற தயங்கி வருகின்றது. மேலும் இந்த அரசமைப்பு சுமார் 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. இதற்கு மென்மேலும் திருத்தங்கள் செய்வது அர்த்தமற்றதுஎன்பதே எங்கள் நிலைப்பாடு. எனினும், இயலாத பட்சத்தில் அமுலில் உள்ள அரசமைப் பில் திருத்தங்கள் செய்வதனை தவிர வேறு வழியும் இல்லை.

கே: அரசு புதிய அரசமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யும் விடயத்தினை இதய சுத்தியுடன் நேர்மையுடன் முன்னெடுக்கின்றது என்று கருதுகின்றீர்களா?

ப: இந்த அரசு புதுமையான ஒரு அரசு என்பதனை அனைவரும் அறிவர். அரசின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் அராஜகத்தன்மை கொண்டவை. மஹிந்தவின் அரசைப் போன்று ஊழல், மோசடிகளுக்கும் இந்த அரசில் குறைவில்லை. பிரச்சினை களைப் பார்த்துக் கொண்டு அரசுதலையிடாமல் இருக்கின்றது. இதனால் இந்த நாட்டில் அரசு ஒன்று இல்லை என்ற எண்ணமே ஏற்படுகின்றது. அரசில் உள்ள அதிகார சக்திகள் வெவ்வேறு அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்களாக உள்ளனர். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்க விரும்பாதவர்களும் அரசில் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் அதிகாரப்பகிர்வினை விரும்புகின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியினர் புதிய யாப்பு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்றநிலைப்பாட்டில் உள்ளனர். சிலர் புதிய யாப்பு வந்தால் ஊழல், மோசடிகளில் ஈடுபட முடியாது என்று அஞ்சுகின்றனர். இவ்வாறானஇழுபறி நிலையே இப்பொழுது காணப்படுகின்றது.தற்போது புதிய அரசமைப்பு பற்றிய யோசனைகளைப் பெற சர்வ கட்சி மாநாடு நடத்தப்படும் என்று அரசுஅறிவித்துள்ளது. எனினும், இது ஒரு காலம் தாழ்த்தும் யுக்திஎன்றே கருதவேண்டியுள்ளது. ஏனெனில் நாடாளுமன்றம் இப்பொழுது அரசமைப்பு சபையாக இயங்கி வருகின்றது. அதில் கட்சிகள் அனைத்தும் உள்ளன. விமல் வீரவன்சவின் கட்சியினர் மற்றும் அதனைப் புறக்கணித்துள்ளனர். இதனை நாங்கள் பெரிதுபடுத்த தேவையில்லை. இந்நிலையில் மீண்டும் மீண்டும் புதிதாக சர்வகட்சி மாநாடுகளை நடத்துவது எமக்கு பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. இதன் நோக்கம் என்ன? இலக்கு என்ன என்பன பற்றி அறிந்து கொண்டே நாங்கள் இவற்றில் பங்குபற்றுவது பற்றி தீர்மானிப்போம்.

கே: புதிய அரசமைப்பு தேவை என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ள ஜே.வி.பி இந்த இழுபறி நிலைமையை எவ்வாறு கையாளப் போகின்றது?

ப: மூன்று முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே புதிய அரசமைப்பு தேவை என்பதனை நாம் வலியுறுத்துகின்றோம்.இதில் முதலாவது விடயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படல் வேண்டும். இரண்டாவது விடயம் புதிய தேர்தல் முறை ஒன்று அவசியம். மூன்றாவதாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும். அதனை அரசமைப்பில் சட்ட ரீதியில்அங்கீகரிக்கப்படல். இதனால் புதிய அரசிமைப்பு ஒன்று அவசியம் தேவை என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். இந்த நோக்கம் இதர கட்சிகளிடம் இல்லை. ஆனால் நாம் அரசமைப்பு சபையில் இருந்து கொண்டு எம்மால் இயன்ற தலையீடுகளைமேற்கொண்டு வருகின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் அண்மையில் நாங்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். தமிழ்க்கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியுடன் நாம் இப்பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். நாட்டு மக்கள் அனைவரும்ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசமைப்பு ஒன்றினை எப்படி உருவாக்குவது என்பது பற்றி நாங்கள் இங்கு கலந்துரையாடினோம். இந்த பேச்சு வார்த்தைகள் வெற்றி அளித்தன. தமிழ்க் கூட்டமைப்பினரும் எமது முன்னிலையில் பெரிய பங்கு இறைச்சித் துண்டினை கேட்கும்நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. ஆனால் இந்த செயற்பாடுகள் முன்னோக்கி நகர்வதில்லை. அரசு இதில் சரியான முறையில் தலையீடு செய்யவில்லை. இதன் விளைவாகதான் மஹிந்தவுடன் உள்ள சிறிய இனவாதக் குழுக்கள் பெரும் அச்ச உணர்வினை மக்கள் மத்தியில் அரசயாப்பு தொடர்பில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசுதான் செய்ய வேண்டிய வேலையை எம்மால் முற்று முழுதாக தோளில் சுமந்து கொள்ளவும் எங்களால் முடியாது.

கே: தமிழ்க் கூட்டமைப்பினருடன் புதிய அரசமைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளீர்கள். புதிய அரசமைப்பு குறித்து அவர்கள் சாதகமான நிலைப்பாடட்டி னைக் கொண்டிருக்கின்றார்கள் என்று கருதுகின்றீர்களா?

ப: ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும் அவரவர்களுக்கு என்று ஒரு நிலைப்பாடு உள்ளது. அது அவரவர் அரசியல் நிலைப்பட்டது. ஆனால் இவ்விடயத்தில் அனைத்து கட்சிகளினாலும் ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வர முடிந்தமை சாதகமான அம்சம் என்றே நான் கருதுகின்றேன்.

கே:நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பது சிறுபான்மையினருக்கு பாதகமான அம்சம் என்று ஒரு கருத்து நிலவுகின்றது.இதனையே சுதந்திரக் கட்சியும் வலியுறுத்துகின்றது அல்லவா?

ப: சிறுபான்மையினர் நலன் என்ற நோக்கில் சுதந்திரக் கட்சி இந்த நிலைப்பாட் டினை எடுக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய அரசில் ஒரு சில தரப்பினர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாது என்ற வாதத் தினை முன்வைக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி முறையை வைத்துக் கொண்டு அரசமைப்பினை உருவாக்க முடியாது. அவ்வாறான செயலுக்கு ஜே.வி.பி உடன்பட மாட்டாது. அதனை தோற்கடிக்க நாங்கள் கடும்நடவடிக்கைகளை எடுப்போம்.

ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும் நபர் யார் என்பதன் அடிப்படையில்தான் சிறுபான் மையினர் பாதுகாப்பு என்ற விடயம் தீர்மானிக்கப்படுகின்றது. எமது நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற விடயம் அதிகாரத்திற்காக இனவாதத் தினைப் பரப்பிய அரசியல்வாதிகளின் செயல்களினால்தான் ஏற்பட்டது. இங்கு நான் சிங்கள இனவாதத்தினை மட்டும் நான்குறிப்பிடவில்லை. தமிழ், முஸ்லிம் இனவாதமும் இங்கு உள்ளடங்கும். மேலும் சிறுபான்மையினர் பாதுகாப்பு அரசமைப்பில்உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய அரசமைப்பில் அது போதுமானதாக இல்லை.

கே: வட பகுதியில் ஜே.வி.பி முன்னெடுக்கும் அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன?

ப: யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை அங்கு மிகவும் மோசமாக உள்ளது. தமிழர் களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அங்கு இதுவரை தீர்க்கப்படவில்லை. மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் கூறுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். ஏனெனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் உள்ளனர். யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்களின் காணிப் பிரச்சினைகள் பெரும் பிரச்சினை யாக உள்ளன. இது குறித்து நாங்கள் தொடர்ச்சியாக அரசிற்கு வலியுறுத்தி வந்தோம். வடக்குக்கு விசேட காணி ஆணைக்குழு ஒன்றை நியமித்து காணிகள் பற்றிய உரிமங்களை ஆராய்ந்து பார்த்து இப்பிரச்சினைக்கு ஒருதீர்வைக் காணுமாறு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். ஆனால் இதனை அரசு செய்ய வில்லை. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக காணிப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அரசியலாக்கிவாக்குகளை சேகரிக்கவே தமிழ்க் கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இவை தீர்க்கக் கூடிய எளிமையான பிரச்சினைகள். நாம் அங்கு விஜயம்மேற்கொண்ட போது சில பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடியதாக இருந்தது. சிலருக்கு பிறப்புச் சான்றிதழ் பிரதி இல்லை. சிலருக்குஅடையாள அட்டை இல்லை.

யாழ்ப்பாணத்தில் விளைச்சலுக்கு ஏற்ற விலைகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் மிகவும் சொற்பமான விலைக்கு அவற்றை விற்கின்றார்கள். அன்றாட வருமானம் இன்றி அவர்கள் உள்ளனர். இந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணஅரசமைப்பு தேவையில்லை. நிர்வாகப் பிரச்சினைகளே அங்கு உள்ளன. இவ்விடயத்தில் அரசு தலையிட வேண்டும். காணாமற் போனவர்கள் பற்றிய பிரச்சினை பற்றியும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். காணாமற் போனவர்கள் பலர் இறந்துவிட்டதாக நம்பப்படுகின்றனர். ஆனால் சட்ட ரீதியில் அது அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. அரசும் மரண சான்றிதழ்களை வழங்காமல் கபட நாடகம் போடுகின்றது. ஏனெனில் இறந்தவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கையை வெளிப்படையாக தெரியவருதல், இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட டல் இழப்பீட்டு தொகை வழங்கப்பட நேரிடும். இது அரசிற்கு பிரச்சினையான விடயங்களாகும். அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. மேலும் தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையும் பெரும் மனிதாபிமான அவலமாகும். இந்த பிரச்சினையில் ஆணையிட்ட கருணா அம்மான், கே.பி போன்றவர்கள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். ஒன்றுமே அறியாதவர்கள் சிறையில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சிறையில் இருந்தது போதும். அவர்களை உடனடியாக விடுதலை செய்வது அவசியமாகும்.

கே: அரசின் இந்த புறக்கணிப்பு மனோபாவம்தான் தனி அதிகாரத்திற்கான கோரிக்கையாக வலுப்பெறுகின்றது என்று நீங்கள்கருதவில்லையா?

ப: உள்ளுராட்சி சபைகளிடமும், மாகாண சபைகளிடமும் அதிகாரம் இருக்கின்றது. அந்த அதிகாரங்களை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கான தடைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வு காண முடியும். அதற்காக தனி அதிகாரங்கள், அதிகாரப்பகிர்வு எதுவும் தேவையில்லை. மொழிப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் வடபகுதி பொலிஸ் நிலையங்களில் தமிழ்பேசும் உத்தியோ கத்தர்கள் இல்லை என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. இதனை அரசமைப்பின் மூலம் தீர்க்க முடியாது. தமிழ் பேசும்அதிகாரிகள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல் நாம் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தினைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். தற்பொழுதுள்ள அதிகாரத்தினை வைத்து பல வேலைத்திட்டங்களை மாகாண சபைகள் மேற்கொள்ள முடியும். அதிகாரத்தினைப் பகிர்ந்தால் என்ன நடக்கும் என்று எவராலும் கூற முடியாது. அதிகாரங்கள் விக்கினேஸ்வரனிடம் போய் சேரும் நிலையே ஏற்படும்.

நாம் ஓர் அரசியல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு முன்னர் எமது நாட்டின் கடந்த கால நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதிகாரம் சம்பந்தப்பட்ட சில வார்த்தைப் பிரயோகங்களின் அர்த்தங்கள் மிகவும்பயங்கரமானவை. அதனால் அந்த வார்த்தைப் பிரயோகங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை. நாட்டைப் பிரிக்கும் அச்சுறுத்தல் முன்பிருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. ஆனால் இல்லாமலும் இல்லை.

கே: புதிய அரசமைப்புக்கான முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் அரசிற்கான ஆதரவு தொடர்பில் நீங்கள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

ப: இந்த அரசு தோல்வியடைந்த அரசு. இந்த அரசை நீக்கிவிட்டு இன்னொரு அரசு வந்தாலும் நிலவும் பிரச்சினைகளில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில் லை என்றே நாங்கள் கருதுகின்றோம். புதிய அரசமைப்புக்கான முயற்சிகள் தோல்வியடையுமாயின் அது எங்களுக்கும் பெரும் பின்னடைவாகவே இருக்கும். அதற்காக நாங்கள் தீவிரமாக போராடுவோம். மக்களுக்கு சார்பான அரசமைப்பினை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அரசை வீழ்த்துவதை விட மக்களுக்கு சார்பான அரசினை உருவாக்கும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் செயற்பட வுள்ளோம். அரசில் கடந்த 70 ஆண்டுகளாக ஐ.தே.கவும், சுதந்திரக்கட்சியும் மாறி மாறி அரசுகளை நடத்தின. பின்பு இந்த கட்சிகள் இணைந்தும் ஆட்சியை அமைத்தும் தோல்விதான் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அரசுஒன்றினை அமைக்கும்தேவையே தற்போது உள்ளது.

இப்பொழுது எங்கள் இலக்கு எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்த லாகும். வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் சிவில்அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கலைஞர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஓய்வுப் பெற்ற அரச ஊழியர்கள் போன்றவர்களையும் இணைத்து பொது முன்னணி ஒன்றினை அமைத்து புதிய மக்கள் அரசு ஒன்றினை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து செல்கின்றோம். இவ்வாறான மக்கள் அரசு ஒன்று அமையும் பட்சத்தில் இனப் பிரச்சினை உட்பட நாட்டின்பிரச்சினைகள் அனைத்திற்கும் சிறந்த தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

கே: புதிய அரசமைப்பு தேவை என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ள ஜே.வி.பி இந்த இழுபறி நிலைமையை எவ்வாறு கையாளப் போகின்றது?

ப: மூன்று முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே புதிய அரசமைப்பு தேவை என்பதனை நாம் வலியுறுத்துகின்றோம். இதில் முதலாவது விடயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படல் வேண்டும். இரண்டாவது விடயம் புதிய தேர்தல் முறை ஒன்று அவசியம். மூன்றாவதாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும். அதனை அரசமைப்பில் சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்படல். இதனால் புதிய அரசமைப்பு ஒன்று அவசியம் தேவை என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். இந்த நோக்கம் இதர கட்சிகளிடம் இல்லை. ஆனால், நாம் அரசமைப்பு சபையில் இருந்து கொண்டு எம்மால் இயன்ற தலையீடுகளைமேற்கொண்டு வருகின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் அண்மையில் நாங்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். தமிழ்க்கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியுடன் நாம் இப்பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். நாட்டு மக்கள் அனைவரும்ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசமைப்பு ஒன்றினை எப்படி உருவாக்குவது என்பது பற்றி நாங்கள் இங்கு கலந்துரையாடினோம். இந்த பேச்சு வார்த்தைகள் வெற்றி அளித்தன. தமிழ்க் கூட்டமைப்பினரும் எமது முன்னிலையில் பெரிய பங்கு இறைச்சித் துண்டினை கேட்கும்நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. ஆனால், இந்த செயற்பாடுகள் முன்னோக்கி நகர்வதில்லை. அரசு இதில் சரியான முறையில் தலையீடு செய்யவில்லை. இதன் விளைவா கத்தான் மஹிந்தவுடன் உள்ள சிறிய இனவாதக் குழுக்கள் பெரும் அச்ச உணர்வினை மக்கள் மத்தியில் அரசயாப்பு தொடர்பில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசு, தான் செய்ய வேண்டிய வேலையை எம்மால் முற்று முழுதாக தோளில் சுமந்து கொள்ளவும் எங்களால் முடியாது.

கே:தமிழ்க் கூட்டமைப்பினருடன் புதிய அரசமைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளீர்கள். புதிய அரசமைப்பு குறித்து அவர்கள் சாதகமான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள் என்று கருதுகின்றீர்களா?

ப: ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும் அவரவர்களுக்கு என்று ஒரு நிலைப்பாடு உள்ளது. அது அவரவர் அரசியல் நிலைப்பட்டது. ஆனால், இவ்விடயத்தில் அனைத்துக் கட்சிகளினாலும் ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வர முடிந்தமை சாதகமான அம்சம் என்றே நான் கருதுகின்றேன்.

கே: நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பது சிறுபான்மையினருக்கு பாதகமான அம்சம் என்று ஒரு கருத்து நிலவுகின்றது.இதனையே சுதந்திரக் கட்சியும் வலியுறுத்துகின்றது அல்லவா?

ப: சிறுபான்மையினர் நலன் என்ற நோக்கில் சுதந்திரக் கட்சி இந்த நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய அரசில் ஒரு சில தரப்பினர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாது என்ற வாதத்தினை முன்வைக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி முறையை வைத்துக் கொண்டு அரசமைப்பினை உருவாக்க முடியாது. அவ்வாறான செயலுக்கு ஜே.வி.பி உடன்பட மாட்டாது. அதனை தோற்கடிக்க நாங்கள் கடும் நடவடிக்கைகளை எடுப்போம்.

ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும் நபர் யார் என்பதன் அடிப்படையில்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற விடயம் தீர்மானிக்கப்படுகின்றது. எமது நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற விடயம் அதிகாரத்திற்காக இனவாதத் தினைப் பரப்பிய அரசியல்வாதிகளின் செயல்களினால்தான் ஏற்பட்டது. இங்கு நான் சிங்கள இனவாதத்தினை மட்டும் குறிப்பிடவில்லை. தமிழ், முஸ்லிம் இனவாதமும் இங்கு உள்ளடங்கும். மேலும் சிறுபான்மையினர் பாதுகாப்பு அரசமைப்பில்உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசமைப்பில் அது போதுமானதாக இல்லை.

கே: வட பகுதியில் ஜே.வி.பி முன்னெடுக்கும் அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன?

ப: யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை அங்கு மிகவும் மோசமாக உள்ளது. தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அங்கு இதுவரை தீர்க்கப்படவில்லை. மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் கூறுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். ஏனெனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் உள்ளனர். யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்களின் காணிப் பிரச்சினைகள் பெரும் பிரச்சினையாக உள்ளன. இது குறித்து நாங்கள் தொடர்ச்சியாக அரசிற்கு வலியுறுத்தி வந்தோம். வடக்குக்கு விசேட காணி ஆணைக்குழு ஒன்றை நியமித்து காணிகள் பற்றிய உரிமங்களை ஆராய்ந்து பார்த்து இப்பிரச்சினைக்கு ஒருதீர்வைக் காணுமாறு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். ஆனால், இதனை அரசு செய்யவில்லை. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக காணிப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அரசியலாக்கி வாக்குகளை சேகரிக்கவே தமிழ்க் கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இவை தீர்க்கக் கூடிய எளிமையான பிரச்சினைகள். நாம் அங்கு விஜயம்மேற்கொண்ட போது சில பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடியதாக இருந்தது. சிலருக்கு பிறப்புச்சான்றிதழ் பிரதி இல்லை. சிலருக்கு அடையாளஅட்டை இல்லை. யாழ்ப்பாணத்தில் விளைச்சலுக்கு ஏற்ற விலைகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் மிகவும் சொற்பமான விலைக்கு அவற்றை விற்கின்றார்கள். அன்றாட வருமானம் இன்றி அவர்கள் உள்ளனர். இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசமைப்பு தேவையில்லை. நிர்வாகப் பிரச்சினைகளே அங்கு உள்ளன. இவ்விடயத்தில் அரசு தலையிட வேண்டும். காணாமற் போனவர்கள் பற்றிய பிரச்சினை பற்றியும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். காணாமற் போனவர்கள் பலர் இறந்துவிட்டதாக நம்பப்படுகின்றனர். ஆனால், சட்ட ரீதியில் அது அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. அரசும் மரண சான்றிதழ்களை வழங்காமல் கபட நாடகம் போடுகின்றது. ஏனெனில் இறந்தவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கையை வெளிப்படையாக தெரியவருதல், இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட நேரிடும். இது அரசிற்கு பிரச்சினையான விடயங்களாகும். அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. மேலும், தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையும் பெரும் மனிதாபிமான அவலமாகும். இந்தப் பிரச்சினையில் ஆணையிட்ட கருணா அம்மான், கே.பி போன்றவர்கள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். ஒன்றுமே அறியாதவர்கள் சிறையில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சிறையில் இருந்தது போதும். அவர்களை உடனடியாக விடுதலை செய்வது அவசியமாகும்.

கே: அரசின் இந்த புறக்கணிப்பு மனோபாவம்தான் தனி அதிகாரத்திற்கான கோரிக்கையாக வலுப்பெறுகின்றது என்று நீங்கள் கருதவில்லையா?

ப: உள்ளுராட்சி சபைகளிடமும், மாகாண சபைகளிடமும் அதிகாரம் இருக்கின்றது. அந்த அதிகாரங்களை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கான தடைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வு காண முடியும். அதற்காக தனி அதிகாரங்கள், அதிகாரப்பகிர்வு எதுவும் தேவையில்லை. மொழிப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் வடபகுதி பொலிஸ் நிலையங்களில் தமிழ்பேசும் உத்தியோகத்தர்கள் இல்லை என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. இதனை அரசமைப்பின் மூலம் தீர்க்க முடியாது. தமிழ் பேசும் அதிகாரிகள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல் நாம் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தினைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். தற்பொழுதுள்ள அதிகாரத்தினை வைத்து பல வேலைத்திட்டங்களை மாகாண சபைகள் மேற்கொள்ள முடியும். அதிகாரத்தினைப் பகிர்ந்தால் என்ன நடக்கும் என்று எவராலும் கூற முடியாது. அதிகாரங்கள் விக்கினேஸ்வரனிடம் போய் சேரும் நிலையே ஏற்படும்.
நாம் ஓர் அரசியல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு முன்னர் எமது நாட்டின் கடந்த கால நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதிகாரம் சம்பந்தப்பட்ட சில வார்த்தைப் பிரயோகங்களின் அர்த்தங்கள் மிகவும் பயங்கரமானவை. அதனால் அந்த வார்த்தைப் பிரயோகங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை. நாட்டைப் பிரிக்கும் அச்சுறுத்தல் முன்பிருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. ஆனால் இல்லாமலும் இல்லை.

கே: புதிய அரசமைப்புக்கான முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், அரசிற்கான ஆதரவு தொடர்பில் நீங்கள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

ப: இந்த அரசு தோல்வியடைந்த அரசு. இந்த அரசை நீக்கிவிட்டு இன்னொரு அரசு வந்தாலும் நிலவும் பிரச்சினைகளில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம். புதிய அரசமைப்புக்கான முயற்சிகள் தோல்வியடையுமாயின் அது எங்களுக்கும் பெரும் பின்னடைவாகவே இருக்கும். அதற்காக நாங்கள் தீவிரமாக போராடுவோம். மக்களுக்கு சார்பான அரசமைப்பினை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அரசை வீழ்த்துவதை விட, மக்களுக்கு சார்பான அரசினை உருவாக்கும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் செயற்பட வுள்ளோம். அரசில் கடந்த 70 ஆண்டுகளாக ஐ.தே.கவும், சுதந்திரக்கட்சியும் மாறி மாறி அரசுகளை நடத்தின. பின்பு இந்தக் கட்சிகள் இணைந்தும் ஆட்சியை அமைத்தும் தோல்விதான் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அரசு ஒன்றினை அமைக்கும்தேவையே தற்போது உள்ளது.
இப்பொழுது எங்கள் இலக்கு எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலாகும். வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் சிவில் அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கலைஞர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் போன்றவர்களையும் இணைத்து பொது முன்னணி ஒன்றினை அமைத்து புதிய மக்கள் அரசு ஒன்றினை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து செல்கின்றோம். இவ்வாறான மக்கள் அரசு ஒன்று அமையும் பட்சத்தில் இனப் பிரச்சினை உட்பட நாட்டின்பிரச்சினைகள் அனைத்திற்கும் சிறந்த தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

நேர்காணல் - ஆர்.பிரியதர்ஷினி

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top