பொருளாதாரத்திலுதம் சுதந்திரம் இல்லை

பொருளாதாரத்திலுதம் சுதந்திரம் இல்லை

உலக பொருளாதார சுதந்திர குறிகாட்டிகள் தற்போது வெளியாகியுள்ளன. பொருளாதாரத்தில் எந்தளவுதூரம் ஒரு நாடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைவிட அதற்கான வாசிப்பை அரசு எந்தளவு தூரம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது என்பதே சுதந்திர குறிகாட்டிகள் வெளியிடப்படுவதற்கான காரணமாகும். இவ்வாண்டில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி 159 நாடுகளில் இலங்கை 94ஆவது இடத்தைப் பெற்று பெரும்பாலும் சுதந்திரமற்றது எனும் நிலையை அடைந்துள்ளது.

சுதந்திரமானதும், தரமானதுமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள பொருளாதார சுதந்திரம் சிறந்த வாசிப்புகளை ஏற்படுத்தித்தரும். சந்தையை உருவாக்குதல், வளங்களைப் பயன்படுத்துதல், ஏனையோரின் சுதந்திரங்களுக்கு மதிப்பளித்தல் போன்றனவே பொருளாதாரக் குறிகாட்டியின் அடிப்படைப் பண்புகளாகக் காணப்படுகின்றன.

ஒரு தனிமனிதனையே அனைத்துவிதமான செயற்பாடுகளுக்கும் பொருளாதார சுதந்திர குறிகாட்டி ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்தும். உயர் சுதந்திர குறிகாட்டி இருக்கும் ஒரு நாட்டில் வருமானம் அதிகமாக இருக்கும். உற்பத்திப் பெறுக்கீடுக்கும் முதலீடு அதிரித்திருக்கும்; தொழில்வாசிப்பின்மை குறைந்திருக்கும்.

பொருளாதார சுதந்திர குறிகாட்டி
எவ்வாறு கணக்கிடப்படுகின்றது

அரச வருமானம் செலவீடு, வரி அறவீடு போன்றவற்றில் ஓர் அரசு பெற்றுள்ள ஸ்தானமும், தனிநபரின் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு எவ்வாறான கவனத்தைச் செலுத்துகின்றது என்பது பணத்தைப் பெற்றுக்கொள்வது, நடமாடும் சுதந்திரம், சர்வதேச வர்த்தகம், கடன்பெறும் தொகை, நிலம், தொழிலாளர்கள், மூலதனம் ஆகிய ஒட்டுமொத்த குறிகாட்டிகளையும் அந்நாட்டின் சனத்தொகையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பொருளாதார சுதந்திர குறிகாட்டியாகும்.

இவ்வாண்டில் இலங்கையின் அடைவு
மட்டம் தொடர்பான மதிப்பீடு

எட்வகேடா நிறுவனத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்தக் குறிகாட்டி இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. காரணம், 1977ஆம் ஆண்டு இலங்கை திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி இவ்வருடத்தோடு நான்கு தசாõப்தத்தைக் கடந்துள்ளது.

நான்கு தசாப்த காலமாக நாம் அடைந்த பொருளாதாரப் பெறுபேறுகள் அனைத்தும் இந்தக் குறிகாட்டியில் தெளிவாக விளங்குகின்றன. எந்த நோக்கத்துக்காக நாம் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினோமோ அந்த நோக்கம் அடையப்பட்டதா என்பதை கணக்கிட இதுவே சரியான தருணம்.

159 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆசைவுகளின் அடிப்படையில் இலங்கை 94ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இது இலங்கைக்கு முன்னேற்றகரமான பாதையை வெளிக்காட்டியுள்ளது. 1977 உடன் ஒப்பிடும்போது 8 மடங்கு அதிகமான தனிநபர் பொருளதார வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதோடு பொருளாதார வளர்ச்சியும் இரு மடங்காகியுள்ளது.

ம்மை ஒருகாலத்தில் பார்த்து வியந்த ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளே பொருளாதா சுதந்திர குறிகாட்டிகளில் முதல்நிலை பெற்றுள்ளன. நமது நாட்டு பொருளாதாரக் கொள்கையை விஸ்தரித்ததன் பின்னரே இந்நாடுகள் பொருளாதாரக் கொள்கைக்கான அடித்தளங்களையே இட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று இலங்கையைவிட 14 மடங்கு சிறப்பான வாழ்க்கையை சிங்கப்பூரிலுள்ள ஒரு தனிநபர் அனுபவிக்கிறார். சிங்கப்பூரை பொறுத்தமட்டில் எம்மைவிட பத்து மடங்கு பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கின்றது. ஹொங்கொங் எம்மைவிட ஏழு மடங்கு சுதந்திரத்தை அனுபவிக்கின்றது. இந்த சதி யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதாரம் எந்தத் திகதியை நோக்கிச் செல்லவேண்டும் என்ற பாதையைக் காட்டுகின்றது.

என்னதான் யுத்தம் நிறைவடைந்தது என்று கூறினாலும் பொருளாதார விஸ்தரிப்பு அல்லது சுதந்திரத்துக்கான வா#ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே. பொருளாதார சுதந்திரத்தில் ஏன் இவ்வாறு பாகுபாடுகளை ஏற்படுத்துகின்றது என பார்ப்போமானால் ஒருவர் தான் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய சுயமான முடிவுகளை எடுக்கக்கூடியவராக இருக்கவேண்டும்.எந்தப் பொருளை தெரிவுசெயவேண்டும், எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்கவேண்டும், அதற்கான வளங்கள் என்ன என்பது தொடர்பில் ஓர் அரசு எந்தளவு தூரம் தலையீடு செய்கின்றது என்பதே இந்தக் குறிகாட்டியின் வெற்றியாகும்.

பொருளாதார சுதந்திர குறிகாட்டியில் முக்கியமான 5 துணைப்பிரிவுகள் காணப்படுகின்றன. முதலாவதாக, அரசின் அளவு எந்தளவு தூரம் இருக்கின்றது. அது சுதந்திர குறிகாட்டியில் தாக்கம் செலுத்தும் காரணம், சுதந்திர பரிமாற்றல்கள் மற்றும் அரசு மக்கள் மீது சுமத்தும் வரிச்சுமை போன்றன அந்நாட்டின் பரப்பை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

அடுத்ததாக, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஆதன உரிமை கொள்ளப்படுகின்றது. அனைவருக்கும் செல்வந்தராகவும் அதிகாரம் படைத்தவராகவும் மாறுவதற்கான சக்தியுள்ளது. சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம் என்ற பண்பே பொருளாதார சுதந்திரத்துக்கு அடிப்படையாகும்.
மூன்றாவதாக, பணப்பெறுமதி எந்தளவுதூரம் பலமாக உள்ளதோ அந்தளவு தூரம் நிதிக் கையாளுகை சிறப்பாக இடம்பெறும். இலங்கையைப் பொறுத்தமட்டில் உலக நாடுகளுடன் போட்டிபோட முடியாதளவு பணவீக்கம் அதிகரித்துள்ளமை இலங்கையின் பின்னடைவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

நான்காவதாக சுதந்திர வர்த்தகம் காணப்படுகின்றது. இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்களும் சுதந்திர கைத்தொழில் பேட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வளர்ச்சிதான் சுதந்திர வர்த்தகத்துக்கு அடிப்படையாக அமையும்.இறுதியாக தொழிலாளர் சட்டம் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் போன்ற காணப்படுகின்றன. அந்தவகையில் பொருளாதார பன்முகத்தன்மை மற்றும் வியாபாரத் தடைத்தாண்டலில் இலங்கை 92ஆவது இடத்தைப் பெற்றுகொண்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி மற்றும் ஆதன உரிமையில் இலங்கை 73ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பணப்பெறுமதியில் 159 நாடுகளில் இலங்கை 135ஆவது இடத்தையே பெற்றுள்ளது.


இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாயினும் பொருளாதார சுதந்திர குறிகாட்டிகள் பாரிய பிரச்சினைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றன. சட்டத்தைப் பின்பற்றாவிடின் பொருளாதார சுதந்திரத்தை எதிர்பார்க்கமுடியாது. எந்தவொரு நாடும் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றாதபோது அங்கு அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது.

ஒட்டுமொத்தமாக நோக்கும்போது பொருளாதார சுதந்திர குறிகாட்டி இலங்கையில் எதிர்பார்த்த எந்தவொரு சாதகதன்மையையும் ஏற்படுத்திவிடவில்லை 77ஆம் ஆண்டு உருவாகக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி ஏனைய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தைக்கூட நாம் அடையமுடியாது தவிக்கின்றோம். இதற்கு ஆட்சிமாற்றங்கள் மீது கவனம் செலுத்திய அளவுக்குப் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமை அல்லது கண்டுகொள்ளாமையே பிரதான காரணமாக விமர்சிக்கப்படுகின்றது.

ஆக்கம்-பா.ருத்ரகுமார்

Latest News

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top