கூட்டாட்சி சாத்தியமா?

கூட்டாட்சி சாத்தியமா?

புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கூட்டாட்சியா அல்லது ஒற்றையாட்சியா என்பது தொடர்பில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று ஒட்டுமொத்த மக்களுமே குழம்பிப்போயுள்ளனர். நாட்டு மக்களுக்குத்தான் இந்த விடயத்தில் விளக்கமில்லை என்று பார்த்தால் அதை உருவாக்கியவர்கள்கூட அதாவது, முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் இடைக்கால அறிக்கையை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவில் இருந்தவர்கள் எனப் பல தரப்பினரும் இது விடயத்தில் முன்பின் முரணான கருத்துகளையே தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்றனர். தாமும் குழம்பி மக்களையும் குழப்பியடிக்கின்றனர் அவர்கள். 

சம்பந்தன் வெளிப்படுத்திய கருத்துகள்
இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, மக்கள் இறைமையின் அடிப்படையில் உள்ளக சுதந்திரத்துடன் அதியுச்சஅதிகாரங்களைப் பயன்படுத்தக்கூடிய வகையிலான கூட்டாட்சியே என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பிலும் அவர் விடாப்பிடி நிலைப்பாட்டைப் பேணுகிறார். இணைந்த வடக்கு, கிழக்கில் படித்த பக்குவமுள்ள முஸ்லிம் முதலமைச்சரை ஏற்பதற்கும் தாம் தயார் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றையாட்சிதான் என்கிறார் ரணில்
சம்பந்தன் தெரிவிப்பதுபோல் அப்படியொன்றும் இடைக்கால அறிக்கையில் இல்லை. ஒற்றையாட்சியின்கீழ் அதியுச்ச அதிகாரங்கள் வழங்கப்படுதலே அரசமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தர், ரணில் இருவருமே அரசியல் தந்திரம், அனுபவம் மிகுந்த பழுத்த அனுபவŒõலிகள். இவர்கள் இருவரும் தெளிவற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது இடைக்கால அறிக்கையின் கனதியையும், அதன் பின்னால் உள்ள பேச்சுகள் மற்றும் விட்டுக்கொடுப்புகளையும் தவிடுபொடியாக்கியுள்ளதென்றால் மிகையாகாது.

3 அம்சக் கோரிக்கைகளை திட்டவட்டமாக தெரிவித்த சுமந்திரன்

புதிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின் தமது மூன்று முக்கிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுதல் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் திரும்பப் பெறப்படமுடியாதவாறான இறுக்கமான பொறிமுறை, நீதித்துறைச் சுதந்திரம் ஆகியவையே கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ளன. இந்த விடயத்தில் சிறு விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

""இடைக்கால அறிக்கையில் ஓர் அங்குலம் கூட இனி கீழிறங்கமுடியாது. நாம் ஏற்கனவே கீழிறங்கி வந்துள்ளோம். தெரிவுக்காக விடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் எமக்குச் சாதகமாக வரவேண்டும்'' என்று தெரிவித்தே தமது மூன்று கோரிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

ஒற்றையாட்சி என்பதைஉறுதிப்படுத்திய ஜயம்பதி

இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஒற்றையாட்சிதான் என்பதை உறுதிப்படுத்தி கருத்துப் பகிர்ந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரத்ன.

"புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சி முறைமை முன்பு இருந்ததைவிடவும் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது'' என்று அவர் தெள்ளத்தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். "கூட்டாட்சி என்ற அம்சமே இடைக்கால அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணங்கள் பிரிந்து செல்லுதலைத் தடுத்தல், மாகாணங்களில் குழப்பங்கள், கலவரங்கள், பிரச்சினைகள் ஏற்படும்போது ஜனாதிபதி நேரடியாகத் தலையிடுதல், தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் கொழும்புக்குச் சாதகமாக உள்ளதையும் அவர் எடுத்தியம்பியுள்ளார். ஜயம்பதியின் கருத்து கொழும்பு அரசின் கருத்து என்றே எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், அவரிடம்தான் இடைக்கால அறிக்கை தொடர்பிலும், புதிய அரசமைப்புக் குறித்தும் புலம்பெயர் மக்களுக்கு குறிப்பாக, புலம்பெயர் தமிழர்களுக்கு விளக்கம் கொடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 

பதறுகின்றது தெற்கு
புதிய அரசமைப்பில் கூட்டாட்சி என்ற பதமே இல்லை என்று ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் மற்றும் ஜயம்பதி ஆகியோர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளபோதிலும், தென்னிலங்கைத் தலைமைகள் நாடு எங்கே ஒற்றையாட்சியை விட்டு நழுவிப்போ#விடுமோ என்ற பதற்றத்தில் உறைந்துள்ளனர். மஹிந்த, விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன உள்ளிட்டோர் இழந்துள்ள தமது öŒல்வாக்கை மீண்டும் சீர்தூக்க வைப்பதற்கு இடைக்கால அறிக்கையில் உள்ளது கூட்டாட்சியே என்றும், வடக்கு கிழக்கு இணையப்போகிறது என்றும் தெரிவித்து தாம் Œõர்ந்த மக்களைப் பதற்றத்திலேயே வைத்து வருகின்றனர்.

கொதித்தெழுகிறார் ஞானசார தேரர்
இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்த நல்லதும் நடந்துவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பவர் பொதுபலசேனாவின் ஞானசார தேரர். இலங்கை என்பது தனிச் சிங்கள நாடு. இங்கு சிறுபான்மை இனங்களாக தமிழர், முஸ்லிம்கள் இருந்தாலும் நாடு சிங்களவர்களுக்கு உரியதே என்ற கடும் கோட்பாட்டை ஞானசார தேரர் இறுக்கமாகப் பின்பற்றுகிறார்.

""ஒரு தென்னந்தோப்பில் கடுகு, மிளகாய் உள்ளிட்ட இடைக்காலப் பயிர்கள் பயிரிடப்படுகின்றபோதிலும் அது தென்னந்தோப்பாகவே இருக்கிறது. இடைக்காலப் பயிர்களின் பெயரில் அவை கடுகுத் தோட்டம் என்றோ அல்லது மிளகாய்த் தோட்டம் என்றோ அழைக்கப்படுவதில்லை'' என்று எக்கச்சக்கமான உதாரணங்களையும் அவர் அடித்துவிட்டுள்ளார். இத்தகையவர் கூட்டாட்சி முறைக்கு சம்மதம் தெரிவிப்பாரா? நிச்சயமாக இல்லை. இனவாதத் தீயை அவர் தொடர்ந்து கக்கிக்கொண்டே வருகிறார். அவரைப் பகைத்துவிட்டு கூட்டு அரசில் கூட்டாச்சியைக் கொண்டுவர இயலாது.

பௌத்த பீடங்களின் அறிக்கை விரைவில்
புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான தமது அபிப்பிராயங்கள், கருத்துகள் ஆகியவற்றை ஓர் அறிக்கையாக வெளியிடவுள்ளன பௌத்த பீடங்கள். தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கை பெரும்பாலும் நாளைமறுதினம் வெளியாக வா#ப்புள்ளது என்று கருதப்படுகிறது.

பௌத்த பீடங்களின் அறிக்கை தயாரிப்பில் முக்கியஸ்தம் வகிக்கும் அஸ்கிரிய பீடம், ""இலங்கைத் தீவில் பௌத்தத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்றும் ஒற்றையாட்சி முறைமைக்குச் சவால்விடுக்கும் வகையில் பல்வேறு அர்த்தப்பாடுகளை வெளிப்படுத்தும் சொற்களை புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று எச்சரித்துள்ளது.

எனவே, வரவிருக்கும் பௌத்த பீடங்களின் அறிக்கை, வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு வழக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட முடியாதவாறான இறுக்கமான பொறிமுறை, நிதித்துறைச் சுதந்திரம் ஆகிய கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகளுக்குப் புறம்பானதாக வரவே அதிக சாத்தியமுள்ளது என்று கருதிக்கொள்ளலாம்.

சாத்தியப்படுமா கூட்டாட்சி?
ஒரு பொருளை திருடினால் அது திருட்டு. அதற்கென்று சில தண்டனைகள் உள்ளன. ஒருவருக்கு அடித்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ அது குற்றம் என்று கருதப்பட்டு அதற்கு என்று சில தண்டனைகள் உள்ளன. ஒருவரைக் கொலை செய்தால் அது பாரதூரமான குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த வரிசாயில் ஒருவரைக் காணாமல் ஆக்குதல் என்பதும் மிகப்பெரிய குற்றமே. ஆனால், அந்தக் குற்றத்தை குற்றமாக அறிவிக்கக்கூட இந்த நாட்டின் நாடாளுமன்றத்தால் முடியவில்லை. காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத்தப்படவிருந்து கைவிடப்பட்டுள்ளதெனின், இத்தகைய பின்னணியில் கூட்டாட்சி என்பது சாத்தியமா?

ஆக்கம்- பிரகாஸ்

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top