சைட்டத்துக்கு சமாதி

சைட்டத்துக்கு சமாதி

காலங்காலமாக பல்கலைக்கழக மாணவர்கள் என்றாலே ஆர்ப்பாட்டக்காரர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள், ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் என்ற பல்வேறு அவப்பெயருக்கு உள்ளாகியுள்ளனர். இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம் இல்லாமலும் இல்லை. 2005 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற சுமார் 200இற்கு மேற்பட்ட பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களில் கண்ணீர்ப்புகைக்குண்டுத் தாக்குதல்களும் தடியடியும் நடத்தப்பட்டுள்ளன.

இவர்களின் நோக்கம்தான் என்ன? காலங்காலமாக ஒரே விடயத்துக்காகவா போராடுகின்றார்கள் என்று ஆராய்ந்துபார்த்தால், சில குறுகிய சக்திகள் பல்கலைக்கழக மாணவர்களை ஆயுதமாகக்கொண்டு செயற்படுகின்றமை தெரியவருகின்றது. முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு புரட்சிகர சிந்தனையில் கொழும்பை நோக்கி ஓர் ஆர்ப்பாட்டத்துக்கேனும் வந்துவிடவேண்டும் என்ற மனநிøயில் மட்டுமே உள்ளனர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் நிகழ்ச்சிநிரல்களை öŒயற்படுத்துகின்றது ஒரு கூட்டம். முன்னிலை ÷Œõசலிஷ கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொது எதிரணி எனப் பல்வேறு குழுக்களும் தமது கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக செயற்படுத்துகின்றனரோ என்ற சந்தேகமும் அனைவரிடமும் உண்டு. ஆனால், இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மாற்றுருவம் பெற்றது 2005ஆம் ஆண்டிலிருந்தேயாகும்.

சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தின் பின்னர் மூன்று அரசுகள் மாறியுள்ளன. கடந்த அரசில் சுகாதார அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறியனவும் சைட்டத்துக்கு எதிராகக் குரல்கொடுத்த பிரதான தலைமையாவார். ஆனால், தற்போது இவ்வளவு தூரம் நிலைமை மோசமடைந்தும் தெளிவான ஒரு முடிவெடுக்க முடியாதிருப்பது எதற்காகவெனத் தெரியவில்லை.
ஆரம்பத்திலிருந்தே தனியார் வைத்தியர்களை அனுமதிக்கக்கூடாது என்ற குறிக்கோளில்மாத்திரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும் தேர்தல் கால சூட்சுமங்களைக்கொண்டே பல்கலைக்கழக மாணவர்கள் நகர்த்தப்பட்டார்கள் என்பது உண்மை.

989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடகொழும்பு மருத்துவக் கல்லூரி, 100 உள்நாட்டு மாணவர்களுக்கும் 20 வெளிநாட்டு மாணவர்களுக்கும் மருத்துவப் பட்டத்தை வழங்கியிருந்தது.1996ஆம் ஆண்டு இவர்கள் பட்டம்பெற்றபோது தனியார்துறை மருத்துவர்களுக்கான பட்டம் தொடர்பில் அவ்வளவாக விமர்சிக்கப்படவில்லை. ஆனால், இதுவே தனியார் மருத்துவத்துக்கான ஆரம்பத்தளமாக அமைந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் போன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் போராட்டங்களுக்கு தலைமை வகித்திருந்தது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், கொள்கையின்றி செயற்படும் அல்லது அரசியலுக்காக விலைபோகும் அமைப்பாக தெளிவான சில காரணங்களால் இவ்வமைப்பு அடையாளப்படுத்தப்பட்டது.

இதற்குக் காரணம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்புகளும் மருத்துவத்துறையில் ஏற்பட்ட ஒழுங்கீனங்களைக் கண்டுகொள்ளாமையுமாகும். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதைப்போல் அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு செய்வோர் என்ற பொதுவானநிலை மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுவிட்டது.

சைட்டத்தை முறையான தரமுடைய அல்லது அரச மருத்துவப் பீடங்களுக்கு நிகரான வகையில் மாற்றவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தால் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த சில தீர்மானங்கள் இந்த நோக்கத்தை அடைவதற்காகவே என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

தரம் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்கியமை, சைட்டம் முழுமையான தகைமை பெறும் வரையில் அங்குள்ள மாணவர்களை அனுமதிக்க மறுத்தமை போன்றன இவர்களின் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். ஆனால், இதனை வெற்றியாக நினைக்க மறுக்கிறார்கள். எந்த குறிக்கோளுக்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றோம் என்ற தெளிவான சிந்தனை அவர்களிடத்தில் இல்லை. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு தன்னை அடையாளப்படுத்தினால் புதுப்புது கோரிக்கைகளுக்கும் அரசு செவிமடுக்கும் என்ற பொது நிலைப்பாடு உண்டு என்பதைப் பலரும் விமர்சிக்கின்றனர்.

காரணம், பிரபல பாடசாலைகளுக்கு தங்களது மாணவர்களை சேர்க்கவேண்டும், வாகன அனுமதிப்பத்திரங்களுக்கான விசேட சலுகைகள் வழங்கப்படவேண்டும், இடமாற்றம் பெற்றுச்சென்ற அரசியல் சகாக்களின் வைத்தியர்களுக்கு நீதி வேண்டும், டெங்கு ஒழிப்பு முறையாக நடைபெறவில்லை போன்ற சில தனிப்பட்ட காரணங்களுக்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர் வேலைநிறுத்தம் செய்தமையும் மறுக்கமுடியாது.

இவ்வாறிருக்கும்போது சைட்டத்துக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நீதியானதெனக் கூற முற்படுபவர்கள்கூட சில தனிப்பட்ட வியாக்கியானங்களின்கீழ் கொச்சப்படுத்திவிடுவார்கள். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ன நோக்கத்துக்காக ஸ்தாபிக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

முழுமையாக தனியார் பல்கலைக்கழகத்தை இல்லாதொழிக்கவேண்டும் எனக் கருதும் சோலிஷவாதமும், காலத்துக்கேற்ற மாற்றம் அவசியம் என்றவகையில் தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதியுங்கள் எனக் கோரும் இருதரப்புமே தற்போது மக்களின் கஷ்டத்தை மறந்துவிட்டதை மறுக்கமுடியாது.

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்தரப் பரீட்டை எழுதினாலும் 20 ஆயிரம் மாணவர்களே பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். ஒரு ஆண்டில் 1,200இற்கும் குறைந்த வைத்தியர்களே தகுதிபெறுகின்றனர். அவர்களிலும் பலர் வெளிநாடு சென்றுவிடுகின்றனர். அப்படியிருக்கையில் அரச தரப்பு கூறும் வியாக்கியானங்களை நம்பி மட்டும் மருத்துவத் துறையை முன்னேற்றிவிட முடியாது என்பதே நிதர்சனமாகும்.

ஆனால், பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம், "சைட்டத்தை தரமுடையதாக்கி அரச பல்கலைக்கழகங்களின் தகுதிக்கேற்றவாறு மாற்றியமையுங்கள்' என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி தற்போது "சைட்டத்தை இல்லாதொழியுங்கள்' என்ற நிலைமைக்குச் சென்றுவிட்டது. இதற்கு மறைமுக அரசியல் காரணிகள் பலமான செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன.

ஒரு மணித்தியாலம், 2 மணித்தியாலம் என நீர்த்தாரைப் பிரயோகத்தில் நெஞ்சை நிமிர்த்திநின்று என்ன பயன்? எமது நோக்கம் இதுவென்றால் அதனை ஏன் அரசியல் காரணிகளுக்காக அடிபணிய வைக்கின்றீர்கள்? என்ற கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். அப்படி நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமாயின் அதில் அரசியல்வாதிகளை ஏன் அனுமதித்தீர்கள் என்ற வினாவும் எழுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் என்ற விம்பம் தோற்றம்பெற அரசியல் தலைமைகளே காரணம். போராட்டத்தில் அடிபட்டு தமது வாழ்க்கைகளையே இழந்த மாணவர்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்தினார்கள் என்பதைவிட வேறென்ன கூற முடியும். ஆர்ப்பாட்டங்களுக்காக பெயர்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் பிளவுபட்டு அரச தலைமைகளோடு கைகோர்த்திருப்பதும் தனது சொந்த பிழைப்புக்காக தனியார் மருந்தகங்களை வளர்ப்பதற்கும் அவர்கள் என்ன நியாயத்தை சொல்லப் போகிறார்கள். சில அடிப்படைகளை விளங்கிக்கொள்ளவேண்டும்.

தனியார் மருத்துவத்துறை தரமற்றதென்றால் அதில் பணிபுரியும் பகுதிநேர அரச வைத்தியர்கள் பல்கலைக்கழக மாணவர்களை துரும்புச்சீட்டாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் என்ன பிழை இருக்கின்றது. அந்த மாணவர்கள் உயிரையும் கொடுக்கும் அளவுக்கு வீதியில் இறங்கிப் போராடி கோரிக்கையைப் பெற்றுவிட்டால் பின்னால் இருந்து öŒõறிந்துவிடுபவர்கள் இனிவரும் காலங்களில் மௌனமடைந்துவிடுவார்களா? இன்னொரு பிரச்சினைக்காகவும் பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சைட்டம் எதிர்ப்பு ஆதரவு என்ற விடயங்களுக்கப்பால் கடந்த அரசும் தற்போதைய அரசும் காய்நகர்த்துகின்றன என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தவறாக சித்திரிக்கப்படக்கூடாது. மக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைய வேண்டும் என்ற நிலையில் தெளிவான சில விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறியேயாகவேண்டும். இதனைவிடுத்து ஆர்ப்பாட்டத்திற்காக எத்தனை பேர் கைது செயப்பட்டாலும் காயமடைந்தாலும், உயிர் துறந்தாலும் வெறும் செய்தியாகவே வெளிக்காட்ட முனைவர் அந்த அரசியல் குள்ளநரிகள்.

Latest News

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top