காலத்தின் தேவை

காலத்தின் தேவை

26 வருடங்கள் யுத்தம் நடைபெற்றபோது செல்வசெழிப்போடு காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்று சீரழிந்துள்ளது. யுத்தத்துக்குப் பின்னரான பொருளாதார கட்டுமான விடயங்கள் தொடர்பில் அரசு தீவிர கரிசனை கொண்டிருந்தாலும் இதுவரையில் எந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட இலங்கை தடுமாறிக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதத்துக்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சி எனக் குறிப்பிட்டிருந்தாலும் அந்தத் தரவுகள் பொ#யானவையென நல்லாட்சி அரசு வெளியிட்ட முதலாவது ஆண்டறிக்கையிலேயே அம்பலமானது.

இலங்கையின் பொருளாதார நகர்வுகள் தொடர்பில் நாம் எவற்றை பேசிக்கொள்ளவேண்டும், எவற்றை புறக்கணிக்கவேண்டும் என்ற ஒரு தெளிவு இல்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. என்னதான் நாம் தனியார்துறையை எதிர்த்தாலும் இலங்கையின் பொருளாதார மீள் உருவாக்கத்துக்குத் தனியார்துறையைப் புறக்கணித்துவிடமுடியாது.
ஆகவேதான் தனியார்துறையை சக்திமிக்கதாக்க இலங்கை எம்முடன் என்ன செய்யவேண்டும் என்பதை உலக வங்கி பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
1. இலகுவான பொருளாதார வெற்றியை அடைந்துவிடலாம் என்ற நிலை தற்போது மாறிவிட்டது.
இலங்கை பொதுத்துறையை நம்பி இதுவரையும் காலம் தள்ளியுள்ளது. உட்கட்டுமானம், சுகாதாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி காணப்பட்டாலும் இலங்கையின் பொதுத்துறையில் பாரிய பற்றாக்குறை நிலவுவதை அண்மைய வரவுசெலவுத் திட்டங்களிலிருந்து உணரமுடிகிறது.
1978ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி 24.2 சதவீதமாக இருந்த நிலையில், 2014ஆம் ஆண்டில் 10.1 சதவீதத்துக்குக் குறைவடைந்துள்ளது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை இலங்கை பெரிதாக சாதித்தாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் தனியார்துறையை மழுங்கடித்தமைதான்.

 2.உலக மற்றும் பிராந்திய சந்தையிலிருந்து இலங்கை தனிமைபடுத்தப்பட்டமை

கடந்த சில தசாப்தங்களாகவே இலங்கை உலக சந்தையின் போட்டித்தன்மையிலிருந்துவிலகியிருந்தது. இதனையே கீழேயுள்ள வரைபு வெளிக்காட்டுகின்றது. 1990 இலிருந்து வியட்நாமுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது மொத்த தேசிய உற்பத்தி இலங்கையிலும் பார்க்க நான்கு மடங்கு வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இதற்கு விவசாயத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளின் பற்றாக்குறையும், சந்தைத்துறையில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களுமே காரணம் என விமர்சிக்கப்படுகின்றது.

3. தனியார்துறை வளர்ச்சியில் இலங்கை முறையான கட்டமைப்பைப் பின்பற்றாமை

இலங்கையின் தனியார்துறை நட்டத்திலேயே இயங்கிவருகின்றது. இலங்கையிலுள்ள கம்பெனிகள் மிகவும் வினைத்திறனானவை. இளைஞர் படையணி செயற்றிறனுடனும் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிபெறும் ஒரு குழுவாக உள்ளது. ஆனால், இந்த இளைஞர் படையணியை எவ்வாறு தனியார்துறையில் கையாள்வது என்பதே இலங்கைக்குள்ள சவாலாக உள்ளது. இதேநிலை அரசதுறையில் மிதமிஞ்சிய தங்கியிருப்பை வெளிக்காட்டுகின்றது.

வரி அறவீட்டு முறைமையிலேயே இலங்கை தங்கியுள்ளது. ஒரு செயற்றிட்டத்தை ஆரம்பிக்கும்போதும், தொழில் முயற்சியைக் கொண்டுநடத்தும்போதும், ஆதனத்தைப் பதிவுசெய்யும் போதும் வரி அறவீடு பாரிய பிரச்சினையாக உள்ளது. அத்தோடு எல்லைகளைத் தாண்டி முதலிடுவதில் இலங்கை வர்த்தகர்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

உலக வர்த்தகச் சந்தையில் அவர்களுக்குள்ள தொடர்பு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கைக் காட்டுவதில் இலங்கை மிகவும் கஷ்டப்படுகின்றது. சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது கடந்த காலங்களைவிட பாரிய பொருளாதார இடைவெளியைக் கொண்டுள்ளது.

4. சரியான வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வந்தடைவதில்லை
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வார இறுதி நாட்களில்கூட கடுமையான வாகன நெரிசலை உணரமுடிகின்றது. கட்டுமானத்துறை கடந்த 5 வருடங்களாக செல்வாக்கு செலுத்திவரும் துறையாகக் காணப்படுகின்றது. ஆனால், இந்த முதலீடுகள் இலங்கைக்குத் தேவையா எனும் சந்தேகம் எழுகின்றது.
இந்தக் கட்டுமானதுறைகளின்போது வர்த்தகச் சந்தைகளை உருவாக்குவதிலும், தொழில்வாய்ப்பை உருவாக்குவதிலும், சர்வதேச சந்தையைப் பெறுவதிலும் எந்தளவு தூரம் பங்களிப்பு செய்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அத்தோடு கொழும்பை மாத்திரம் மையமாகக்கொண்டு கட்டுமான தொழில் மேற்கொள்வதனால் பாரிய பிரந்திய இடைவெளியை இது வெளிகொணர்ந்துவிடும்.

5. சிறு மற்றும் மத்தியதர தொழில்வாண்மையாளர்களின் பற்றாக்குறை 

நிறுவன ரீதியான படிமுறைகள், வியாபாரப் பதிவுகள், வரி போன்றவற்றில் எல்லைகளைத் தாண்டி செயற்படுவதாக இலங்கை மீது குற்றஞ்சுமத்தப்படுகின்றது. இலங்கை வியாபாரக் குறிகாட்டிகளில் 110ஆவது இடத்தில் தற்போதுள்ளது.
2025 நோக்கிய இலக்கில் முறையான சட்ட மற்றும் செயற்பாட்டு கருவூலங்களை முறையாகக் கையாண்டால் 70ஆம் இடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்புள்ளது.

தற்போதும்கூட இலங்கையில் சிறு மற்றும் மத்தியதர வியாபாரம் பாரிய அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றது. ஆனாலும் எதிர்காலத்தை நோக்கிய செயற்பாடுகள் எந்தளவு தூரம் உள்ளது என்பதே இங்கு கவனிக்கக்கூடியதாகும். பொருளாதாரக் கொள்கைகள், முதலீட்டுக் கொள்கைகள், சூழலியல் கருத்திட்டங்கள் போன்றனவே இதற்குப் பங்களிப்புச் செய்யமுடியும்.

6. வர்த்தக சீர்திருத்தமும் தனியார்துறை வளர்ச்சியும் இணைக்கப்படல் வேண்டும்
சிறந்த உற்பத்தியைப் பெற நிலையான சந்தைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும். தொழில்நுட்பத்துடன் திறம்வா#ந்த போட்டித்தன்மையுடன் கூடிய சந்தையை இலங்கை பெறமுடியும். அதற்கான அனைத்து சூழ்நிலையும் இலங்கையிடம் தற்போதுள்ளது. இலங்கையிலுள்ள தொழிற்படையால் தற்போது உள்ளதைவிட உத்வேகத்தடன்செயற்படமுடியும். அவர்களால் சிறந்த தொழிலை பெற்றுக்கொள்ளமுடியும். நுகர்வோர் குறைந்த விலையில் தரமானதும் அதிக தெரிவுடனும் பொருட்களைப் பெற்றுகொள்ள முடியும்.

இதற்கு தனியார்துறையின் சிறந்த ஒத்துழைப்பே இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. காலந்தாழ்த்தாது தனியார்துறையின் மூலம் நன்மைகளைப் பெற்றுகொள்ளவேண்டும். வெறுமனே அரசதுறையை நம்பி மட்டும் பயனில்லை. காலத்துக்கேற்ற வகையில் சர்வதேச சந்தையிடம் போட்டியிட இலங்கைக்குள்ள ஒரே தெரிவு தனியார்துறை மாத்திரமேயாகும்

ஆக்கம்- ருத்ரகுமார்

Latest News

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top