Items filtered by date: Tuesday, 14 November 2017

ஈராக் - ஈரான் எல்லையில் பாரிய நில அதிர்வு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானதால் இன்றை தினத்தை தேசிய துக்க தினமாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈராக் - ஈரான் எல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் சுமார் 540 பேர் இறந்ததுடன் 8000 த்துக்கும் அதிகமானோர் காயமைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நில அதிர்வில் ஈரானில் சர்போல் ஈ சஹாப் எனும் பிரதேசத்திலேயே அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. குளிர் காலநிலை ஈரான் - ஈராக் எல்லையை சூழ்ந்து இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் குளிரின் மத்தியில் இரண்டாவது இரவையும் கழித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகள் 'தேவைப்பட்டால் உதவிசெய்ய தயார்' என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இயக்குனர் பாலா இயக்கி வரும் படமான 'நாச்சியார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாச்சியார் படத்தின் டீசர் வெளியீட்டு திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் நவம்பர் 15ஆம் திகதி (நாளை) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா, ராக்லைன் வெங்கடேஷ் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை பாலாவின் 'பி ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. இசைஞானி இளையராஜா இசையில் ஈஸ்வர் ஒளிப்பதிவில், சதிஷ் சூர்யா படத்தொகுப்பில் இத் திரைப்படம் உருவாகி வருகின்றது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களின் வருமானங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும், நெருக்கடியான நிலைகளிலும் அவர்களுக்கு அருந்துவதற்கு போதியளவு உணவு காணப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்காகவும் 5.4 பில்லியன் ரூபாய்களை அன்பளிப்பு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கான உதவி எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்தளவு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமாக இந்த நன்கொடை அமைந்துள்ளதுடன், மொனராகலை, பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராமிய மக்களுக்கு அனுகூலமளிப்பதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

2017 - 2022 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுலில் இருக்கும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை கிராமிய மற்றும் பெருந்தோட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களின் சிறு மற்றும் நடுத்தரளவு வர்த்தகங்களை உருவாக்குவதிலும் வலுவூட்டுவதிலும் பங்களிப்பு வழங்கவுள்ளது.

பெருந்தோட்ட மட்டங்களில் தொழில் உருவாக்கம், வியாபார அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் அவர்களின் பங்குபற்றலை மேம்படுத்த ஊக்கமளிக்கும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு வியாபார செயற்படுத்தல் சூழலை இந்தத்திட்டம் உதவியளிக்கவுள்ளது.

'வறுமை நிலையில் வாழ்பவர்களை கவனத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நாம் அறிமுகம் செய்துள்ளோம். சிறந்த குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் முதல் அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவது வரையான செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாகவும், பெண்கள் வலுவூட்டும் செயற்பாடுகளினூடாகவும் இந்த பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது வாழ்க்கை தராதரத்தில் குறிப்பிடத்தக்களவு உயர்வை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.“ என ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் துங்-லாய் மார்கியு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சிலதுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பங்காண்மைகளினூடாக மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அவர்களின் வாழ்க்கையில் நிலைத்திருக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதுகிறோம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீண்டும் எதிர்வரும் 20ம் திகதி விரிவுரைகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஜனவரி முதல் மருத்துவ பீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொள்ள முடிவு செய்தோம். இந்தநிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தீர்வினை கருத்தில் கொண்டு எதிர்வரும் 20ம் திகதி முதல் விரிவுரைகளில் கலந்து கொள்ள நாம் தீர்மானித்துள்ளோம்.

சைட்டம் தொடர்பான போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை அரசு இணங்கிய விடயங்களை செயற்படுத்தாவிடில் மீண்டும் பாரிய போராட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் எப்போதும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளோம். ஆனால் அரசின் கேளிக்கை விளையாட்டுக்களுக்கு எம்மை பழிகாடாக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.

Published in உள்நாடு
மேல் மாகாணத்தில் டீசல் மற்றும் பெற்றோலால் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் மின் நிலையங்களில் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டம் குறித்து சிந்தித்துவருவதாக மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
 
நாடாளுமன்றம் சபாநாயர் கருஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. தினப் பணிகள் முடிவடைந்தப்பினர், வாய்மூல வினாவுக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசும் ஆரசிங்க, நாடு எதிர்காலத்தில் பாரிய மின் தட்டுப்பாடொன்றை எதிர்கொள்ளவுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களை சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில் பாதிப்பை எதிர்கொள்வதற்கு மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் அமைச்சால் மேற்கொள்ளப்படும் மாற்று நடவடிக்கைகள் என்ன? என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
 
அவர் மேலும் கூறியதாவது, 
 
மேல் மாகாணத்தில் டீசல் மற்றும் பெற்றோல் மூலம் மின் உற்பத்தி செய்யும் பல நிலையங்கள் உள்ளன. அவை அனைத்துமே உரிய அனுமதிப் பத்திரங்களை பெற்று இந்த வருடத்துக்குள் புதுப்பிக்கப்படும். 
 
மாநகர அபிவிருத்தியென்பது சுற்றாடல் பாதுகாப்புடனேயே நடைபெறவேண்டும். இதனால் தொடர்ந்தும் எரிபொருள் மூலம் மின் உற்பத்திகளை மேற்கொள்வது உகந்ததல்ல. இயற்கை எரிவாயுவுக்கு மாறுவதே பொருத்தமானது. அதுவே சுற்றாடலுக்குப் பாதுகாப்பாக அமையும். நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய தேவையும் உள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு அடுத்ததாகஇ பெரிய மின் உற்பத்தி நிலையம் கெரவலப்பிட்டியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அது 300மெகாவோட்ஸ் மின் உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.  
Published in உள்நாடு
பொருளாதார அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால் அரசதுறையை போன்று தனியார்துறையையும்  சக்திமயப்படுத்த வேண்டும் என்று  நிதி இராஜங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 
 
நாடாளுமன்றத்தில் 218ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
 
அவர் மேலும் கூறியதாவது,  
 
மலைநாட்டிலும், கிராமபுரங்களிலும் வாழும் 20வீதமான மக்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றனர். 17இலட்சத்திற்கு அதிகமான மக்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமே தமது பொருளாதார நடவடிக்கைகள் பூர்த்திச் செய்கின்றனர். அரச வருமானம் குறைவு, நாட்டின் வட்டிவீதம் 20வீதம் வரை அதிகரித்துள்ளமையால் பின்தங்கி பொருளாதார நிலையிலேயே நாம் உள்ளோம். 
 
வருடமொன்றுக்ணுகு 20வீதமான அரச வருமானத்தை ஈட்ட முடியாவிடின் அரசiதுறையை முகாமைத்துவம் செய்வது கடினமானதாகும். 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச வருமானம் ஒவ்வொரு ஆண்டு குறைந்துகொண்டே வந்துள்ளதுள்ளது. குறிப்பாக கடந்த ஆட்சியில் பாரிய அளவில் அரச வருமானம் வீழ்ச்சிக்கண்டிருந்தது. என்றாலும் 2015ஆம் ஆண்டுமுதல் ஓரளவு வளர்ச்சியை காட்டியுள்ளது. 
 
உலகிலும், ஆசிய பிராந்தியத்திலும் பொருளாதார ரீதியில் சக்திமயமடைந்த நாடுகள் அனைத்தும் விவசாயத்துறைக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகளாகும். ஆனால், கடந்த காலத்தில் நாம் விவசாய நடவடிக்கைகளுக்கு அதிகளவான முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. 
 
மூன்று தகாப்தகால யுத்தமும் எமது பொருளாதாரத்தை பாதித்திருந்தது. நாட்டில் ஏற்பட்ட மூன்று கலோபரங்களால் இரண்டரை இலட்சம் மக்கள் இறந்தனர். 3 மில்லியனுக்கு அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். மனிதவள வீழ்ச்சியும், இடம்பெயர்வும் விவசாயத்துறையை பெரிதும் பாதித்திருந்தது. 
 
அரசதுறையை மாத்திரம் சக்திமயப்படுத்துவதால் பொருளாதார அபிவிருத்தியை அடைந்துவிட முடியாது. தனியார் துறைக்கு சம அளவிளான முக்கியத்துவத்தை கொடுத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கி நகர முடியும். சிங்கப்பூரில் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்புகளை நாம் படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பல்லின,மதஙகளை கொண்ட அந்நாட்டில் திறந்த பரிமாற்றல் பொருளாதாரத்தின் மூலம் வளர்காணமுடிந்துள்ளது. 
 
இலங்கையிலும் முதலீடுகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள சட்டத்திட்டகளை மாற்றியமைக்க வேண்டும். 30வருடகால யுத்தால் பாரிய பின்னடைவை சந்தித்திருந்தநாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கு அரசதுறையை போன்று தனியார் துறையையும் சக்திமயப்படுத்த வேண்டும் என்றார். 
Published in உள்நாடு
நிதிமோசடிக்கும் துணைபோக மங்கள சமரவீரவுக்கு நிதி அமைச்சு வழங்கப்பட்டமை நல்லாட்சி அரசு பெற்ற பாரிய வெற்றியாகும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
 
நாடாளுமன்றத்தில் 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
 
அவர் மேலும் கூறியதாவது, 
 
நிதி அமைச்சர் மங்கள சமரவீர அரசியல் வரலாற்றில் எந்தவொரு மோசடிக்கும் துணைபோகவில்லை. நிதி அமைச்சை நிர்வகிக்க வேண்டுமாயின் சுத்தமான கை இருக்க வேண்டும். 
 
முன்பு டெலிகொம் நிறுவனத்தில் மோசடி அதிகளவில் நடைபெற்றது.  அதனை மங்கள சமரவீத தனியார் துறைக்கு வழங்கியிருந்தார். இதனால் டெலிகொம் தரமிக்க நிறுவனமாக மாறியது.
 
நாட்டின் கடன் சுமை இருந்தும் நலன்புரி சேவைகளை நாம் நிறுத்தவில்லை. 13ஆம் வகுப்புவரை கட்டாய கல்வியை வழங்க திட்டமிட்டுள்ளோம்.  கடன் இல்லாமல் இருந்தால் பல சேவைகளை செய்திருக்க முடியும். நாட்டில் அரச ஊழியர்கள் 15 இலட்சம் பேர் உள்ளனர். எனினும் அரச ஊழியர்களினால் நாட்டுக்கு உரிய சேவை கிடைக்கின்றதா? சாதாரண மக்களின் வரி மூலமாகவே அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த வேண்டியுள்ளது. 
 
தனியார் துறையுடன் ஒத்துழைப்புடன் செயற்படும் போதே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றார். 
Published in உள்நாடு
நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளை குறைப்பதற்கான திட்டங்களை வழிநடத்துவது குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவொன்றினை நியமித்துள்ளதாக நீதி அமைச்சர் தளதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
 
நாட்டில் தற்போது சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளை கட்டுப்படுத்துதற்கான புதிய திட்டங்களை யுனிசெப் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து நீதி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகின்றது. நீதிமன்ற கட்டமைப்பில் தேங்கி கிடக்கின்ற விரைவில் விசாரணைக்கெடுத்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுகொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அதற்கமைய புதிய நீதிமன்ற கட்டமைப்புகளையும் உருவாக்கி அதன் மூலம் பல வழக்கு விசாரணைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அதற்கான நிதியும் கூட தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறான புதிய மாற்றங்கள் பலவற்றை நீதி அமைச்சினுல் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Published in உள்நாடு

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top