வீடியோ கேம்களில் மூழ்கி இருப்பது மனநோயின் அறிகுறி

வீடியோ கேம்களில் மூழ்கி இருப்பது மனநோயின் அறிகுறி

வீடியோ கேம் விளையாட்டுக்களுக்கு அடிமையாவதை மனநோய் என வகைப்படுத்த உலக சுகாதார மையம் ஆலோசித்து வருகிறது.

அன்றாட பணிகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு எந்நேரமும் வீடியோ கேம்களில் மூழ்கி இருப்பது மனநோயின் அறிகுறி என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதை சர்வதேச நோய்கள் வகைப் பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு ஒன்றையும் உலக சுகாதார மையம் தயாரித்துள்ளது.

சர்வதேச நோய்கள் வகைப் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வரும் உலக சுகாதார அமைப்பு, கடைசியாக 1990 ஆம் ஆண்டு அந்தப் பட்டியலை வெளியிட்டது.

இந்நிலையில் 2018 இல் புதுப்பிக்க உள்ள அந்தப் பட்டியலில் வீடியோ கேம் மோகமும் ஒரு நோயாக இடம்பெற வாய்ப்புள்ளது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top