மீண்டும் செயலிழந்த மெஸென்ஜர்

மீண்டும் செயலிழந்த மெஸென்ஜர்

கடந்த வாரங்களில் இரண்டாவது முறையாகவும் பேஸ்புக் மெசேஞ்சர் செயலி முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் பலநாடுகளுளில் பேஸ்புக் மெசேஞ்சர் இவ்வாறு முடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக , உலகளவில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரத்திலும் இது போன்று பேஸ்புக் மெசேஞ்சர் முடங்கியிருந்தது.

எவ்வாறாயினும் , அது சில மணி நேரங்களில் வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் ஒரு வார இடைவெளிக்குள் மீண்டும் பேஸ்புக் மெசேஞ்சர் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில பேஸ்புக் பாவனையாளர்களுக்கு மெசேஞ்சர் செயலி செயற்படுகின்ற போதும் அநேகமானோருக்கு அது செயற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் இதுவரை தெரியப்படவில்லை.

இதன் காரணமாக , பேஸ்புக் பாவனையாளர்கள் மெசேஞ்சர் செயற்படாமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top