யூடியூப் காணொளிகளை ஆய்வு செய்யும் குழு விஸ்தரிப்பு

யூடியூப் காணொளிகளை ஆய்வு செய்யும் குழு விஸ்தரிப்பு

யூ டியூபில் வன்முறை தொடர்பான காணொளிகளை ஆய்வு செய்யும் குழுவை விரிவுப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயங்கரவாதம், வன்முறையை தூண்டும் காட்சிகள் போன்ற கணொளிகளை கட்டுப்படுத்த யூ டியூப் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.

இதனால், காணொளிகளை பதிவேற்றும் நபர்கள் சிரமப்படுவதாக அதிகளவில் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், யூ டியூபில் உள்ள காணொளிகளை ஆய்வு செய்யும் பணிகளில் அதிகளவு ஊழியர்களை ஈடுபடுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

யூ டியூபில் பதிவேற்றப்படும் காணொளிகளை கண்காணிக்கும் பணியில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top