“ஜஸ்ட் டயல்“ நிறுவனத்தை கைப்பற்றுகிறது கூகுள்

இந்தியாவின் தேடல் இணையதள நிறுவனமான “ஜஸ்ட் டயல்“ நிறுவனத்தை கூகுள் நிறுவனம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டால் கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப் பெரிய கையகப்படுத்தலாக இது இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் “இது தொடர்பாக முக்கிய முதலீட்டு நிறுவனம் பேச்சு வார்த்தையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஜஸ்ட் டயல் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் முன்னரே பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இரண்டு நிறுவன அதிகாரிகளும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டனர். இந்த கையகப்படுத்தல் முடிவுக்கு வர சில நாட்கள் ஆகலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

கூகுள் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்க உள்ளது குறித்து இந்த அறிக்கை வெளிவந்த பின்னர் ஜஸ்ட் டயல் பங்குகள் 20 சதவீதம்வரை ஏற்றம் கண்டுள்ளது.

செப்டம்பர் மாத நிலவரப்படி ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் 10,892 ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனம் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெங்களுருவைச் சேர்ந்த ஹல்லி லேப் என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கையகப்படுத்தியது. 2014ஆம் ஆண்டில் இணையதள பாதுகாப்பு சார்ந்த இம்பீரியம் நிறுவனத்தை கையகப்படுத்தியது.

ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த 2 கோடி நிறுவனங்களின் தகவல் திரட்டு உள்ளது. கூகுள் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்திய கூகுள் எர்கோ செயலிக்கு இந்த தகவல் திரட்டு பயனுள்ளதாக இருக்கும்.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top