20 மெகாபிக்சல் செல்பி கமராவுடன் 'OPPO F5'

'OPPO F3' வெற்றியையடுத்து F5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது OPPO. இந்த புதிய ஸ்மார்ட்போன், அதன் முந்தைய பதிப்பை போன்றே செல்பி போகஸ் அமைப்பை கொண்டிருக்கும்,

மேலும் முன்புற மராவில் செயற்கை நுண்ணறிவு அழகு தொழில்நுட்பம் உள்ளடக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

'OPPO F5' இரண்டு ரெம் சேமிப்பு வகைகளில் வருவதோடு, 4ஜிபி ரெம், 32 ஜிபி உள்ளடங்கியதாக காணப்படுகின்றது.

Duel சிம் கொண்ட OPPO F5 ஸ்மார்ட்போனில் கலர்ஒஸ் 3.2 அடிப்படையிலான android 7.1 மூலம் இயங்குகிறது. OPPO F5 ஸ்மார்ட்போனில் 1080*2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.0 இன்ச் முழு HD, DFT டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 4Gb அல்லது 6Gb ரேம் உடன் இணைந்து அக்டா கோர் மீடியாடெக் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 256Gb வரை விரிவாக்கக்கூடிய 32Gb உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. OPPO F5 ஸ்மார்ட்போனில் f/1.8 அபெர்ச்சர், ப்ளேஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கமரா மற்றும் f/2.0 அபெச்சர் கொண்ட 20 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமராவை கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3200 MAH மின்கல திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, wifi 802.11 GPS/ஏ-ஜிபிஎஸ், GPRS, ப்ளூடூத் 4.20, USB, 3.5mm ஓடியோ ஜெக், ரேடியோ, 3G, 4G மற்றும் மைக்ரோ யு.எஸ்.பீ ஆகியவை வழங்குகிறது. 152 கிராம் எடையுடையது. இது கருப்பு, தங்கம், சிகப்பு போன்ற வண்ண வகைகளில் வருகிறது.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top