தற்கொலைக்கு முயன்ற குல்தீப் யாதவ்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.

தர்மசாலாவில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அது முதல் சுழற்பந்து வீச்சில் ஜொலித்து வரும் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அடுத்தடுத்த பந்துகளில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை சாய்த்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

சமீபத்தில் இவர் அளித்த செவ்வியொன்றில் இவ்வாறு கூறியிருந்தார்,

நான் 13 வயதில் உத்தரபிரதேச மாநில 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் தேர்வாளர்கள் என்னை அணியில் சேர்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட வேதனையில் கிரிக்கெட்டை துறந்து விடலாம் என்று கூட நினைத்தேன். அத்துடன் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்தேன். எல்லோருக்கும் ஆத்திரத்தில் இதுபோன்ற எண்ணங்கள் வரத்தான் செய்யும். நல்லவேளையாக அந்த தற்கொலை முயற்சி கைகூடவில்லை.

வேகப்பந்து வீச்சாளராக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஆனால் பயிற்சியாளர் தான் என்னை கட்டாயப்படுத்தி சுழற்பந்து வீச்சில் ஈடுபட வைத்தார்.

நான் பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்கினேன். கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு பொழுதுபோக்காக தான் நினைத்து ஆடினேன். ஆனால் எனது தந்தை தான் கிரிக்கெட்டை வாழ்க்கையாக நினைத்து விளையாடும் படி என்னை வற்புறுத்தியதுடன்இ என்னை கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற வைத்தார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top