உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன் போட்டி ஆரம்பம்

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், உலக டெனிஸ் தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. டூர் இறுதி சுற்றுஎன்று அழைக்கப்படும்.

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

தொடக்க நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 9-ம் நிலை வீரர் ஜாக் சோக்கை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

1 மணி நேரம் 31 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜாக் சோக்கை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top