Items filtered by date: Saturday, 16 December 2017

புதுவருடத்தை முன்னிட்டு ஓப்போ (oppo) புதிய ஸ்மார்ட் தொலைபேசியை வெளியிடவுள்ளது. சிவப்பு நிறத்தில் புதிய  சிறப்பம்சங்களுடன்  இந்த ஸ்மார்ட் தொலைபேசியில்  வெளிவரவுள்ளது. அண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் தொலைபேசியில் 6.01 இன்ச் HD தொடுதிரையை  கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் தொலைபேசியில், மேலும் 18:9 என்ற  திரை  வசதியையும் கொண்டுள்ளது.

ஓப்போ ஆர்11எஸ்  ஸ்மார்ட் தொலைபேசியில் குவால்காம்  ஸ்னாப்டிராகன்  660 செயலி இடம்பெற்றுள்ளது,  அதன்பின்  அண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தைகொண்டுள்ளது .

oppo.jpg

இந்த ஸ்மார்ட்போன்  4ஜிபி ரெம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 16+20 எம்பி டுவல் கமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே தரத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கமரா 20 மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்கவின் மகளை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் சந்திக்க மறுத்துள்ளமை பக்கச்சார்பானது என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று காலை ட்விட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய தந்தையின் அவலநிலை தொடர்பில் வேண்டுகோள் விடுப்பதற்காக தஸநாயக்கவின் மகள், இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா நிபுணர்களை அணுகியுள்ளார் என்றும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் தொடர்பான விசாரணை இல்லை என்பதற்காக,அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக நாமல் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த நிபுணர்கள், தங்களுடைய வெளிப்படையான பக்கச்சார்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு, தெஹிவளையில் வைத்து ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

அதே ஆண்டு, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகியோரும் கொழும்பில் கடத்தப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க உட்பட எழுவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் எழுவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

அரசியலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த தாம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் ஆலோசனை பெறும் அளவுக்கு தாழ்ந்துவிடவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிலரது அழுத்தங்களே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றிணைந்த எதிரணியின் பேச்சு முறிவடையக் காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதாவது, 1967ஆம் ஆண்டிலிருந்து அரசியல் செய்துவரும் தாம், நாமல் ராஜபக்ஷ போன்றவர்களது ஆலோசனைகளை பெறவேண்டிய தேவை இல்லை. அவரிடம் ஆலோசனை பெறுவதற்கு நான் என்ன குழந்தையா? என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை 2018ஆம் ஆண்டு முதல் காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண சபையின் கிராம பிரதேசங்களில் இருந்து நகர பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லாமையால், மாணவர்கள் காலை உணவை பெற்றுக்கொள்ளாமல் பாடசாலைக்கு வருகின்றனர்.

இதன் காரணமாக மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்த முடியவில்லை என்று ஆசிரியர்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளனர்.

7.30க்கு ஆரம்பமாவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இதனை கருத்திற் கொண்டு 8 மணிக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர், வடமாகாண கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் அனுப்பி வைப்பதாகவும், அதற்கு ஆளுநரிடம் அனுமதியை பெற்றுக் கொண்டு தகுதியான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரம் மாற்றப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பு கண்டி பிரதான வீதியிலுள்ள பிரதான பரிமாற்ற மையமாக கடவத்தை நகரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரம் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அடுத்த ஆண்டு 2018 ஜனவரி மாதத்தில் இலங்கையின் இரண்டாவது தலைநகராக கடவத்தை நகரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், 2020ஆம் ஆண்டு இலகு ரயில் சேவை கடவத்தை வரை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் வீட்டில் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் குறித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டபோது குறித்த பெண் தனது வீட்டினுள் கசிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாய் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் காரணமாக தனது கணவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வறுமை காரணமாக இவ்வாறு செயற்பட்டதாக பொலிஸாரிடம் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

யாழ்ப்பாணத்தில் பூனை கடித்தமையால் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சங்கானை பகுதியை சேர்ந்த 41 வயதான பசுபதி பத்மநாதன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பத்மநாதன் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது பூனை ஒன்று கடித்துள்ளது. இதனையடித்து உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையினால், பிரேத பரிசோதனை முடியும் வரை மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

உடலில் விஷம் கலந்துள்ளமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை மேற்கொண்ட வைத்தியர் என்.பிரேம்குமார் தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த பூனையின் உடலில் ஏதோ ஒரு நோய் தன்மை காணப்படுவதாகவும் பூனையை வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறும் உறவினர்களுக்கு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published in உள்நாடு

மனிதப் படுகாலைகள் மற்றும் கப்பம் கோரல்களுடன் தொடர்புடைய பிரபல பாதாள உலக உறுப்பினரின் பிரதான உதவியாளர் உள்ளிட்ட நால்வரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

எல்பிட்டிய, நியாகம, கோனலகொட பிரதேசத்தில் வைத்தே நேற்றைய தினம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரிடமுமிருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி அதற்குப் பயன்படுத்தும் ஐந்து தோட்டாக்கள், ரி 56 ரகத் துப்பாக்கி அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியாகம பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போதே அவர்களைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் அவர்களிடமிருந்து 150 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Published in உள்நாடு

தசைப்பிடிப்பில் இருந்து குணமடைந்துள்ள அஞ்சலோ மெத்யுஸ் இந்திய அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் களமிறங்குவார் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது ருநாள் போட்டியின் போது 111 ஓட்டங்களைப் பெற்ற மெத்யுஸ் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் அவர், களமிறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வலை பயிற்சியில் மெத்யுஸ் பங்கேற்றார். பயிற்சியில் ஈடுபட்ட அவர், ஒரு சில ஓவர்கள் பந்தும் வீசினார்.

இதுதொடர்பாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க கூறுகையில் “ மெத்யுஸ் உடல் தகுதியுடன் உள்ளார். மொஹாலி போட்டியின் போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர், அதில் இருந்து குணமடைந்துள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்டார். தொடரை தீர்மானிக்கும் விசாகப்பட்டினம் ஒருநாள் போட்டிக்கு அவர் தயாராக உள்ளார். ஒட்டுமொத்த அணியில் உள்ள 15 வீரர்களும் முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு
Page 1 of 4

Latest News

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top