திருட்டில் ஈடுபட்ட இராணுவ வீரர் சிக்கலில்

திருட்டில் ஈடுபட்ட இராணுவ வீரர் சிக்கலில்

நாட்டில் பல பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடிக்கணனிகளை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் வாரியபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வாரியபொல, புத்தளம், தலங்கம, மாவத்தகம, ஆரச்சிகட்டுவ மற்றும் ஆணமடுவை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடிக்கணனிகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கினர்.

சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான குறித்த நபர் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர் என பொலிஸார் ஆரம்பித்துள்ள முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபர் இன்று வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top