விடியோ ஆதாரத்துடன் விசாரணை ஆரம்பம்

விடியோ ஆதாரத்துடன் விசாரணை ஆரம்பம்

"நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல், குழப்பம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன'' என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் குழப்ப நிலைமைகளின்போது பதிவான காணொளி காட்சிகளைப்பெற்று, அதனை ஆதாரமாகக்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ""கூச்சல், குழப்பங்களுடன் நிறைவடைந்த நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும்
சபையினுள் உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

ஆனால், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு எழுத்துமூல முறைப்பாடும் செய்யப்படவில்லை.இந்தச் சம்பவம் குறித்து கட்சித் தலைவர்கள் சிலர் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளனர். எனவே, கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கமைவாக நாடாளுமன்ற குழப்பம் குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளன'' என்றார்.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top