கொழும்பு - தூத்துக்குடி சரக்கு கப்பல் சேவை ஆரம்பம்

கொழும்பு - தூத்துக்குடி சரக்கு கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கும் தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான தூத்துக்குடி ஆகியவற்றுக்கும் இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

வாரம் இரு முறை பயணம் மேற்கொள்ளும் எம்.வி.சார்லி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் 1,730 டி.இ.யூ கொள்ளளவு கொண்டது, இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தூத்துக்குடி நோக்கிக் பயணமாகும்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா சரக்குப் பெட்டக முனையத்தில் இருந்து, கடந்த ஜனவரி 9 அன்று தனது முதல் பயணத்தை எம்.வி.சார்லி ஆரம்பித்தது.

இந்த கப்பல் சேவையின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை துறைமுக அதிகார சபையின் விற்பனை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான தலைமை மேலாளர் உபுல் ஜயதிஸ்ஸா, புதிய கப்பல் சேவைக்கு இலங்கை துறைமுக அதிகார சபையினால் மிகச் சிறந்த சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்தியத் துணைக்கண்டத்தில், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்டு செயற்படும் தொழில்களுக்கு இந்த சரக்கு கப்பல் சேவை வாய்ப்பளிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்; பிபிசி தமிழ்

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top