வடக்கு பாடசாலைகளுக்கு நேரமாற்றம்

வடக்கு பாடசாலைகளுக்கு நேரமாற்றம்

வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை 2018ஆம் ஆண்டு முதல் காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண சபையின் கிராம பிரதேசங்களில் இருந்து நகர பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லாமையால், மாணவர்கள் காலை உணவை பெற்றுக்கொள்ளாமல் பாடசாலைக்கு வருகின்றனர்.

இதன் காரணமாக மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்த முடியவில்லை என்று ஆசிரியர்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளனர்.

7.30க்கு ஆரம்பமாவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இதனை கருத்திற் கொண்டு 8 மணிக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர், வடமாகாண கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் அனுப்பி வைப்பதாகவும், அதற்கு ஆளுநரிடம் அனுமதியை பெற்றுக் கொண்டு தகுதியான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top