உதவி ஆசிரியர்களுக்கு விரைவில் நல்லசேதி

உதவி ஆசிரியர்களுக்கு விரைவில் நல்லசேதி

மலையக உதவி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், குறித்தகுழுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அங்கம் வகிக்கிறது என்றும், விரைவில் உதவி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக, உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், “மலையக உதவி ஆசிரியர்களுக்கு 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது அநீதியானது. மிகவும்வறுமையான சூழலிலேயே இவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இவர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோகணேசன், “உங்களது கருத்து வரவேற்கத்தக்கது. விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும் என்றார்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top