பின்தங்கிய பொருளாதார நிலையிலேயே நாம் உள்ளோம்

பொருளாதார அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால் அரசதுறையை போன்று தனியார்துறையையும்  சக்திமயப்படுத்த வேண்டும் என்று  நிதி இராஜங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 
 
நாடாளுமன்றத்தில் 218ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
 
அவர் மேலும் கூறியதாவது,  
 
மலைநாட்டிலும், கிராமபுரங்களிலும் வாழும் 20வீதமான மக்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றனர். 17இலட்சத்திற்கு அதிகமான மக்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமே தமது பொருளாதார நடவடிக்கைகள் பூர்த்திச் செய்கின்றனர். அரச வருமானம் குறைவு, நாட்டின் வட்டிவீதம் 20வீதம் வரை அதிகரித்துள்ளமையால் பின்தங்கி பொருளாதார நிலையிலேயே நாம் உள்ளோம். 
 
வருடமொன்றுக்ணுகு 20வீதமான அரச வருமானத்தை ஈட்ட முடியாவிடின் அரசiதுறையை முகாமைத்துவம் செய்வது கடினமானதாகும். 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச வருமானம் ஒவ்வொரு ஆண்டு குறைந்துகொண்டே வந்துள்ளதுள்ளது. குறிப்பாக கடந்த ஆட்சியில் பாரிய அளவில் அரச வருமானம் வீழ்ச்சிக்கண்டிருந்தது. என்றாலும் 2015ஆம் ஆண்டுமுதல் ஓரளவு வளர்ச்சியை காட்டியுள்ளது. 
 
உலகிலும், ஆசிய பிராந்தியத்திலும் பொருளாதார ரீதியில் சக்திமயமடைந்த நாடுகள் அனைத்தும் விவசாயத்துறைக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகளாகும். ஆனால், கடந்த காலத்தில் நாம் விவசாய நடவடிக்கைகளுக்கு அதிகளவான முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. 
 
மூன்று தகாப்தகால யுத்தமும் எமது பொருளாதாரத்தை பாதித்திருந்தது. நாட்டில் ஏற்பட்ட மூன்று கலோபரங்களால் இரண்டரை இலட்சம் மக்கள் இறந்தனர். 3 மில்லியனுக்கு அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். மனிதவள வீழ்ச்சியும், இடம்பெயர்வும் விவசாயத்துறையை பெரிதும் பாதித்திருந்தது. 
 
அரசதுறையை மாத்திரம் சக்திமயப்படுத்துவதால் பொருளாதார அபிவிருத்தியை அடைந்துவிட முடியாது. தனியார் துறைக்கு சம அளவிளான முக்கியத்துவத்தை கொடுத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கி நகர முடியும். சிங்கப்பூரில் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்புகளை நாம் படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பல்லின,மதஙகளை கொண்ட அந்நாட்டில் திறந்த பரிமாற்றல் பொருளாதாரத்தின் மூலம் வளர்காணமுடிந்துள்ளது. 
 
இலங்கையிலும் முதலீடுகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள சட்டத்திட்டகளை மாற்றியமைக்க வேண்டும். 30வருடகால யுத்தால் பாரிய பின்னடைவை சந்தித்திருந்தநாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கு அரசதுறையை போன்று தனியார் துறையையும் சக்திமயப்படுத்த வேண்டும் என்றார். 

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top