சிறுவர் பாதுகாப்பு குறித்து மேற்பார்வை

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளை குறைப்பதற்கான திட்டங்களை வழிநடத்துவது குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவொன்றினை நியமித்துள்ளதாக நீதி அமைச்சர் தளதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
 
நாட்டில் தற்போது சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளை கட்டுப்படுத்துதற்கான புதிய திட்டங்களை யுனிசெப் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து நீதி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகின்றது. நீதிமன்ற கட்டமைப்பில் தேங்கி கிடக்கின்ற விரைவில் விசாரணைக்கெடுத்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுகொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அதற்கமைய புதிய நீதிமன்ற கட்டமைப்புகளையும் உருவாக்கி அதன் மூலம் பல வழக்கு விசாரணைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அதற்கான நிதியும் கூட தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறான புதிய மாற்றங்கள் பலவற்றை நீதி அமைச்சினுல் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top