இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

களுத்துறை பரகஸ்தொட, மில்லெனிய பகுதியில் உள்ள வீடொன்றினுல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரே வீட்டில் வசித்த இருவரே இவ்வாறு கழுத்திற்கு கயிறொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மில்லெனிய பகுதியை சேர்ந்த 28 வயதுடைய கோசல சசின் பொன்சேகா என்பவரும் 19 கோசலி மஹேஷிகா என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்ட இளம் தம்பதிகள் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என ஒரு பிள்ளையின் தந்தை என்றும் தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் காதலுற்ற நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று கையடக்க தொலைபேசியின் திரையில் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் பரகஸ்தொட பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவந்துள்ளனர். இவ்வாறான நிலையில் யுவதியின் வீட்டிற்கு வந்த நபர் மோட்டார் சைக்கிளிலில் யுவதியையும் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

அவர்கள் வீட்டின் அருகில் மரண நிகழ்வொன்றிற்கு வருகை தந்தவர்கள் சிலர் யுவதியை மேற்படி நபர் அழைத்துச் செல்வதை யுவதியின் பெற்றோருக்கும் அறிவித்துள்ளனர். அதனையடுத்து மகளை அழைத்துச் சென்ற நபருக்கு யுவதியின் பெற்றோர் தொலைபேசி ஏற்படுத்தியிருந்தபோதும் அதற்கு அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.

அதனையடுத்தே யுவதியின் பெற்றோர் மகளை அழைத்துச் சென்ற நபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்போதே இருவரும் கழுத்திற்கு சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதை அறிந்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரகஸ்தொட பொலிஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top