தமிழ் அரசியல் கைதிகளுக்காக யாழில் இன்று மாபெரும் பேரணி

பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்படவுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அண்மைக்காலமாக தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில், அதிகாரத்திலுள்ள பலராலும் பல வாக்குறுதிகள் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவை பொய்த்துப்போன நிலையில், அவர்கள் ஜனநாயக ரீதியில் குறித்த விடயத்தை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்லும் முயற்சியிலும், அரசுக்குத் தொடர்சியான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் தமது போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானித்துள்ளனர்.

அந்தவகையில், இந்த மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில் அனைத்துப்பீட மாணவர்கள், பொது அமைப்புகள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top