சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மற்றுமொறு தடை நீக்கம்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மற்றுமொறு தடை நீக்கம்

சவுதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மானை நியமித்து, பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றார்.

பெண்களுக்கு பல தடைகளை விதித்திருந்த நிலையில் பெண்களுக்கு வாகனம் செழுத்த விதித்திருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டமையைத் தொடர்ந்து,

தற்போது சவுதி அரேபிய அரசு மெல்ல நவீனத்துவத்துக்கு முகம் கொடுத்து வருகின்றது. பழமைவாதக் கருத்துகளுக்கு விடைகொடுத்து சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில், முதன் முறையாக சவுதி அரேபியப் பெண்கள் கால்பந்து போட்டியை மைதானத்தில் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜித்தா நகரிலுள்ள கால்பந்து மைதானம் முதன்முதலாக இந்த அனுமதியை  பெண்களுக்கு அளித்திருக்கின்றது. நேற்று  இந்த மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை  பெண்கள் கண்டுகளித்துள்ளனர்.

அதேசமயம், மைதானத்தில் பெண்கள் அமர்வதற்கு தனிக் பகுதி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கென  கழிவறைகள்,  வாகன நிறுத்துமிடம் போன்ற ஏற்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top