இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள் வெற்றிகரமாக வானுயர்ந்தது

இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள் வெற்றிகரமாக வானுயர்ந்தது

இஸ்ரோ நிறுவனம் இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோளை இன்று ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

30 செயற்கைக்கோள்களும், 6 நாடுகளைச் சேர்ந்த 28 சொயற்கைக்கோள்களும் உள்ளடங்களாக 1323 கிலோ கிராம் நிறையுடைய இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள் இன்று காலை 9.28 ற்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த கார்டோசாட் 2 சீரிஸ் என்ற 710 கிலோ கிராம் எடையுடன், பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கை கோளும், 5 கிலோ கிராம் எடையுள்ள நானோ செயற்கை கோளும் அடங்கும். இந்த செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - 40 ராக்கெட்டில் செலுத்தப்படுகிறது.

இதில் கனடா, அமெரிக்கா, ஃபின்லாந்து, பிரான்ஸ், சௌத் கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 நானோ செயற்கை கோள்களும், 3 மைக்ரோ செயற்கை கோள்களும் சேர்ந்து விண்ணில் ஏவப்பட்டது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top