இந்திய பிரஜைக்கு அமெரிக்காவில் மரண தண்டனை

இந்திய பிரஜைக்கு அமெரிக்காவில் மரண தண்டனை

அமெரிக்காவில் வசித்துவந்த இந்திய பிரஜையான ரகுநந்தன் யண்டாமுரி எனும் நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 32 வயதான ரகுநந்தன் யண்டாமுரிக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரகுநந்தன் H1B விசாவில் அமெரிக்கா சென்று பென்சில்வேனியா மாகாணத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகின்ற நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் அவருடைய 10 மாத பேத்தியை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்த வழக்கில் ரகுநந்தன் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி அவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் தனது மரண தண்டனையை எதிர்த்து ரகுநந்தன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்ததை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி ரகுநந்தனுக்கு விஷஊசி ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பென்சில்வேனியா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top