இயற்கை சூழலுக்கு பாதிப்பின்றி சீனாவின் அதிவேக ரயில்

இயற்கை சூழலுக்கு பாதிப்பின்றி சீனாவின் அதிவேக ரயில்

சீனாவில் மிகப்பெரிய மலைத்தொடரின் வழியே, சூழலியலை பாதிக்காமல் அமைக்கப்பட்ட அதிவேக ரயில் சேவையானது ஆரம்பமாகியுள்ளது.

சீனாவின் ஆல்ப்ஸ் என புகழப்படும் கின்லிங் மலைத்தொடரின் வழியே, ஜியான் – செங் டு நகரங்களை இணைக்கும் வகையில், 643 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரயில்பாதை அமைக்கப்பட்டது.

சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவுற்றதைத் தொடர்ந்து, மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில் சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளது.

அடர்ந்த காடுகள், அரியவகை உயிரினங்கள் வசிக்கும் கின்லிங் மலையில், சூழலியலை பாதிக்காமல், நவீன வசதிகளுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரலாற்று சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றது.

இந்த புதிய ரயில் சேவை மூலம், ஜியான் – செங்டு நகரங்களுக்கு இடையிலான 11 மணி நேர பயணமானது வெறும் மூன்றரை மணி நேரமாகக் குறையும் என கூறப்படுகின்றது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top