அப்பாவுடன் திரையில் தோன்றும் மகன்

அப்பாவுடன் திரையில் தோன்றும் மகன்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்கு பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஏஞ்சலினா’. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் சூரி மிக முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். சாம்.சி.எஸ். இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவாளராகவும், தியாகு படத்தொகுப்பாளராகவும், ஜி.சி.ஆனந்தன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

'ஆறாம் திணை பிலிம்ஸ் – ஸ்ரீ சாய் சிரஞ்சீவி பிலிம்ஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றது. சமீபத்தில், துவங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, காமெடி நடிகர் சூரியின் மகன் சர்வான் இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் “நேற்று படத்தின் ஒரு முக்கியமான காட்சி ஒன்றில் சூரியின் மகன் சர்வான், சூரியுடன் சேர்ந்து நடித்தான். குழந்தைகளை நடிக்க வைப்பது என்பது எப்போதும் எனக்கு சந்தோஷத்தை தரும். அதுவும் சூரியின் மகனை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவது எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்” என்று தெறிவித்துள்ளார்.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top