நிதிக் கொள்கையிலும், வட்டி வீதத்திலும் மாற்றமில்லை

அமுலில் உள்ள நிதிக் கொள்கை உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார சூழலுக்கு பொருத்தமானதென இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நிதிக் கொள்கையிலும், வட்டி வீதத்திலும் மாற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும் சபை தீர்மானித்துள்ளது.

“இதன் இலக்குகள் வட்டி வீதத்தை தனி அலகினால் பேணுதல், இதன் மூலம் நிலைபேறான அபிவிருத்திப் பாதைக்குரிய வசதிகளை ஏற்படுத்துதல் என்பனவாகும்.

இதனையடுத்து பூகோள பொருளாதார செயற்பாடுகள் தொடர்ந்தும் வலுவடையும் எனவும் இலங்கையின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் சாதகமான நிலைக்கு மாறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கான காரணம் கைத்தொழில் சேவைகள் துறைகளின் வளர்ச்சியும், விவசாயத்துறை வழமைக்கு திரும்புகின்றமையேயாகும் என்றும்“ என மத்திய வங்கியின் நாணயச் சபை தெரிவித்துள்ளது.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top