எரிபொருள் விநியோகம் வழமைக்கு; இந்தியாவிலிருந்து வருகிறது கப்பல்

நாளாந்த எரிபொருள் விநிநோயகம் தொடர்பில் நுகர்வோர் அச்சம்கொள்ளத் தேவையில்லை அமைச்சர் அர்ஜு ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தான வலையமைப்பிற்குள் உள்ள 80 வீதமான எரிபொருள் இன்று மாலைக்குள் விநியோகப்பட்டு விடுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்டளவு எரிபொருள் விநியோகமே மேற்கொள்ளப்ட்டு வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நேற்று முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் ஏற்றி வரும் கப்பல்களினால் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து எரிபொருளை ஏற்றி கப்பலொன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடையுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை எரிபொருள் விநியோக நிலைமைகள் சீரடையும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள், தரக்குறைவாக இருந்ததால், அது நிராகரிக்கப்பட்டதாகவும், இதையடுத்தே, நெருக்கடி ஏற்பட்டதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சபுகஸ்கந்தவில் பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியத்தில் வரையறுக்கப்பட்டளவு எரிபொருளே கையிருப்பில் இருப்பதாகவும், இதுபோன்ற நிலைமைகள் ஏற்படாத வகையில் அரசாங்கம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருகோணமலையில் உள்ள 99 எரிபொருள் குதங்கள் ஐஓசி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 15 ஐ மாத்திரமே அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகவும், அவற்றை பெற்றோலியயக் கூட்டுத்தாபனம் பயன்படுத்துவதற்கும் அந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top