இலங்கையின் இறையாண்மைக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்

இலங்கையின் இறையாண்மைக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்

/ Friday, 13 October 2017 10:26
இலங்கையின் இறையாண்மையில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டு வருகின்றமை எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக மாறக் கூடிய வாய்ப்பபுள்ளதாக பொது எதரிணி எச்சரிக்கை விடுத்தது. 
 
அமெரிக்காவுக்கு அடிப்பணிந்து எமது நாட்டின் சுதந்திரம், இறைமையை அடகு வைக்கப் பார்க்கின்றனர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளது. 
 
பொரளையில் என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் பொது எதரிணியால் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் அமைச்சரும், சமசமஜ கட்சியின் தலைவருமான திஸ்ஸ வித்தான மேற்கண்டவாறு கூறினார்.
 
உலகில் இரண்டாவது சிறந்த இயற்கைத் துறைமுகமாக திருக்கோணமலை துறைமுகம் காணப்படுகிறது. இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு இந்தத் துறைமுக தற்போது கைமாறியுள்ளதுடன், அமெரிக்கக் கடற்படை சிப்பாய்களும் தற்போது இதில் நிலைகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
 
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சமீபத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்திருந்தார்.  இது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்கும் என்பதை எம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
 
அமெரிக்க இராணுவத் தளபதி, நாம் சீனாவுடன் எவ்வாறு அரசியல் மேற்கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளார். இராணுவத்தின் பிரிவு ரீதியாக அமெரிக்கா ஆலோசனை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்குவது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுத்துள்ள சவாலும் அச்சுறுத்தலுமாகும்.
 
நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து தான்தோன்றித்தனமாக மேலாதிக்கத்தை செலுத்தி வருவதானது  எதிர்காலத்தில் இலங்கையின் இறையாண்மைக்கு பாரதூரமான அச்சுறுத்த விடும் காரணியாகும் என்றார்

Please publish modules in offcanvas position.