இலங்கைக் கடற்படையில் விமானப்படைப் பிரிவை பலப்படுத்த திட்டம்

இலங்கைக் கடற்படையில் விமானப்படைப் பிரிவை பலப்படுத்த திட்டம்

/ Friday, 13 October 2017 10:41

இலங்கையின் கடல் எல்லைகளை கண்காணிக்கும், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை விமானப்படையின் கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தற்போதைய அச்சுறுத்தல்களும், இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவமும், கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை ஆயுதப் படைகளுக்கு உயர்வசதிகளைக் கொண்ட கடற்படைக் கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வான் மற்றும் கடல்சார் ஆற்றல்களை கட்டியெழுப்பும் வகையில், விமானப்படையுடன் இணைந்த - கூட்டு தொடர்பாடல் வலையமைப்புடன் கூடிய, கூட்டு கட்டளை அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Please publish modules in offcanvas position.