வடக்கு ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

வடக்கு ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! Featured

/ Friday, 13 October 2017 10:12

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம நடத்தப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் கோஷமும் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தையொட்டி ஆளுநர் அலுவலகத்தின் வாயில் மூடப்பட்டு கலகமடக்கும் பொலிஸார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை போராட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் விசேட அதிரடிப் படையினரும் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Please publish modules in offcanvas position.