அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்;  ஜனாதிபதிக்கான மனுவும் கையளிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்; ஜனாதிபதிக்கான மனுவும் கையளிப்பு

/ Friday, 13 October 2017 10:03

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் கிளிநொச்சியில் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் மதத்தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பங்கேற்றனர்.

கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதியில் அரசியல் கைதிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மனு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேவேளை அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணமும் முழுவதும் பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Please publish modules in offcanvas position.