அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே விமான நிலையம் தனியார் மயமாகும்

அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே விமான நிலையம் தனியார் மயமாகும் Featured

/ Friday, 13 October 2017 09:41

மத்தல சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான எந்தவொரு முடிவினையும் அரசு மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியது போல், மத்தல சர்வதேச விமான நிலையத்தினை இந்தியாவுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறி கூட்டு எதிரக்கட்சியனர் உள்ளிட்ட பலரும் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில், மத்தல சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான எந்தவொரு முடிவினையும் அரச மேற்கொள்ளவில்லை எனவும், இது தொடர்பில் முன்வைக்கபடும் குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “மத்தல விமான நிலையம் எதிர்காலத்தில் தனியார்மயப்படுத்தப்பட்டால், அது அமைச்சரவையின் நீண்ட விவாதத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்படும். அத்துடன், இந்தவிடயம் தொடர்பில் பாராளுமன்றத்திடம் அறிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தெளிவூட்டப்படும்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, தலைமையிலான நல்லாட்சி அரசு இவ்வாறான முடிவுகளை அவசரப்பட்டு மேற்கொள்ளாது எனவும், இது போன்ற முடிவுகளை எடுக்கும்போது அரச வெளிப்படை தன்மையுடன் நடந்துக்கொள்ளும்“ என அவர் தெரிவித்துள்ளார்.

Please publish modules in offcanvas position.