மத்திய அதிவேக நெடுஞ்சாலை மோசடி: நாடாளுமன்றில்  விவாதம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை மோசடி: நாடாளுமன்றில் விவாதம் Featured

/ Friday, 13 October 2017 03:54
 
 மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
 
இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை ஜே.வி.பி. கொண்டுவரவுள்ளது.
 
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கான விலைமனுகோரல், நிறுவனத் தேர்வு, உத்தேச மதீப்பீடு உட்பட மேலும் சில விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போதும் அதிவேக வீதி தொடர்பில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், குற்றச்சாட்டுகளை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நிராகரித்திருந்தார். 
 
இந்நிலையிலேயே எதிர்வரும் 19ஆம் திகதி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

Please publish modules in offcanvas position.