பிணை முறி மோசடியில் பிரதமருக்கும் தொடர்புண்டு; சிறு குழந்தைக்கும் தெரியும்

பிணை முறி மோசடியில் பிரதமருக்கும் தொடர்புண்டு; சிறு குழந்தைக்கும் தெரியும் Featured

/ Thursday, 12 October 2017 12:05

“சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காணப்படுகின்றார். எப்போது ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இவர் அழைக்கப்படுவார்“ என நாட்டு மக்கள் காத்திருப்பதாக பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் நேற்றுமுன்தின விசாரணைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பெரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். “2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து கூட்டாக மேற்கொண்டதே பிணைமுறி மோசடியாகும்.

பிணைமுறி மோசடியுடன் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளமையாலேயே அமைச்சர், மலிக்சமரவிக்கரம, கபீர் ஹசீம் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுவதற்கு முதல்நாள் ஜனாதிபதியின் காலில் விழுந்து காபாற்றுமாறு கதறியுள்ளனர்.

நேற்றைய தினத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழு மீதிருந்த நம்பிக்கை அற்றுப்போயுள்ளது. காரணம் நேற்று (நேற்றுமுன்தினம்) நடைபெற்ற விசாரணைகளில் குறுக்கு விசாரணைகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, இதற்கு குந்தகம் ஏற்படக்கூடாது.

சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்குகூட வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு கடவுசீட்டுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பாரிய கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்டுள்ள அர்ஜுன் மகேந்திரனின் கடவுச்சீட்டு இன்னும் முடக்கப்படாதுள்ளது ஏன்?

பிணைமுறி மோசடியின் பின்புலத்தில் பிரதமரே உள்ளார் என்று 5 வயது குழந்தைகூட அறியும். எனவே, இவர் விசாரணைகளுக்காக எப்போது அழைக்கப்படுவார் என்று மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்த பாரிய கொள்ளை சம்பவத்திற்கு பின்னாள் பிரதமர் ரணில் இருக்கிறார் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும்.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please publish modules in offcanvas position.