மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியா நுளம்பு

மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியா நுளம்பு Featured

/ Thursday, 12 October 2017 08:47
மன்னார், யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி பவானி தெரிவித்தார். 
 
மலேரியா நுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 
தலைமன்னாரில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் நுளம்புக் குடம்பிகள், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 19 கிணறுகளில் சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
 
தற்போது அவை வவுனியா  நகரில் இரு இடங்களில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை மலேரியா நோய் அற்ற நாடு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததன் பின்னர் இந்த நுளம்புகள் மீண்டும் இங்கு பரவ ஆரம்பித்திருக்கின்றன. எனினும், இவற்றால் யாருக்கும் மலேரியாக் காய்ச்சல் பரவியதாக இதுவரையில் மருத்துவ  அறிக்கைகள் இல்லை.           

Please publish modules in offcanvas position.