உணவு ஒவ்வாமையால் 200 பேர்  வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமையால் 200 பேர் வைத்தியசாலையில் Featured

/ Thursday, 12 October 2017 08:30

கண்டி - ஹரகம பிரதேசத்தில் தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் 200 ஊழியர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமையாலேயே இவர்கள் சுகயீனமடைந்துள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலை உணவை உட்கொண்ட பின்னர் ஊழியர்கள் திடீர் சுகயீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு ஊழியருக்கும் பாரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லையென வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please publish modules in offcanvas position.