புத்தளம் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

புத்தளம் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் Featured

/ Thursday, 12 October 2017 05:59

புத்தளம் கருவலகஸ்வெவ சியம்பலாவெ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வனப்பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்,

சம்பவத்தில் 18 மற்றும் 31 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Please publish modules in offcanvas position.