அழுத்தம் கொடுத்த  ஏக்கநாயக்கவுக்கு வந்தது தலையிடி

அழுத்தம் கொடுத்த ஏக்கநாயக்கவுக்கு வந்தது தலையிடி Featured

/ Thursday, 12 October 2017 04:38
தேசிய அரசிலிருந்து வெளியேறப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு  தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்த இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவுக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
 
முன்னாள் அரசின் காலத்தில் டி.பி.ஏக்கநாயக்க கலாசார அமைச்சராக பதவி வகித்தபோது கலாசார விடயங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதியில் வாகனமொன்றை கொள்வனவு செய்து சொந்த தேவைக்குப் பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக்கொண்டே இவ்வாறு விசாரணைக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
 
நெருக்கடியான அரசியல் சூழலில் சு.கவின் அரசியல் நகர்வதால் எதிரணிக்குத் தாவுவோம் என்று அழுத்தம் கொடுத்துவருபவர்களின் வாயை அடைப்பதற்காக டி.பி.ஏக்கநாயக்கவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது

Please publish modules in offcanvas position.