மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை Featured

/ Wednesday, 11 October 2017 10:38

மனைவியை, பொல்லால் தாக்கிப் படுகொலைசெய்துவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று ருவன்வெல்லயில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம், ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரலியவத்த பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மனைவியான நி​ரோஷா குமாரி (வயது 34) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய கணவனான நுவன் ரணசிங்க( வயது 35) என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவ்விருவரும் ருவன்வெல்ல மொரியவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று, ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் இரண்டும், கரவனெல்ல வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் நீண்டநாட்களாக நிலவிவந்த குடும்ப பிரச்சினை​யே இந்தச் சம்பவத்துக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Please publish modules in offcanvas position.