ஜே.வி.பியின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

ஜே.வி.பியின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை Featured

/ Wednesday, 11 October 2017 08:55

உமா ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் முன்னணியின் இணைப்பாளரும் ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சமந்த வித்தியாரத்ன உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பதுளை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அவர்கள் இன்று மேற்கொள்ள திட்டமிட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட செயலக காரியாலயம், பிரதேச செயலக காரியாலயம் என்பவற்றிற்கு சட்டவிரோதமாக உள்நுழைதல், சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தல் அல்லது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுதல் போன்ற செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பண்டாரவளை பொலிஸாரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் தடையுத்தரவைக் கோரியிருந்தனர்.

அதனை ஆராய்ந்த பண்டாரவளை நீதவான் நீதிமன்றம், அரச அலுவலகங்கள் முற்றுகை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படல், என்பவற்றுக்கு தடைவிதித்ததுடன், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், திட்டமிட்டவாறு இன்றைய தினம் தமது போராட்டம் இடம்பெறும் என உமா ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் முன்னணியின் இணைப்பாளரும் ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சமந்த வித்தியாரத்ன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

Please publish modules in offcanvas position.