அமெரிக்க குடும்பத்தை விடுவித்த பாகிஸ்தான் இராணுவம்

அமெரிக்க குடும்பத்தை விடுவித்த பாகிஸ்தான் இராணுவம் Featured

/ Friday, 13 October 2017 10:47

கடந்த ஐந்து வருடங்களாக தாலிபன் தீவிரவாதிகள் பிணைக்கைதியாக பிடித்துவைத்திருந்த ஐந்துபேர் கொண்ட வட அமெரிக்க குடும்பம் ஒன்றை பாகிஸ்தான் படையினர் விடுவித்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வைத்து கனடாவை சேர்ந்த ஜோஷுவா போயில் மற்றும் அவரது அமெரிக்க மனைவி கெய்ட்லன் கோல்மேன் ஆகியோர் தலிபன்களால் கடத்தப்பட்டனர்.

தம்பதியர் பிணைக்கைதியாக இருந்தபோது அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

ஆப்கான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அரசாங்கம் கொடுத்த இரகசிய தகவலையடுத்து குடும்பத்தினர் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

மீட்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க - பாகிஸ்தான் உறவில் இது ஒரு நம்பிக்கையளிக்கும் தருணம் என்று கூறியுள்ளார்.

''பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, அந்நாட்டில் இன்னும் அதிக பாதுகாப்பு வழங்கவேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பத்தை அங்கீகரிப்பதன் குறியீடாக உள்ளது'' என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தம்பதியர் பிணைக்கைதியாக வைக்கப்பட்ட போது, தலிபன் ஆதரவு ஹக்கானி நெட்வெர்க் என்ற தொலைக்காட்சியில் தம்பதியர் குறித்த காணொளி ஒன்று வெளியிடப்பட்டது.

ஆஃப்கானிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தரப்பைச் சேர்ந்த மூவரை விடுவிக்குமாறு தம்பதியை கடத்திய தலிபன்கள் கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Please publish modules in offcanvas position.