போர் மூலம் பதிலடி கொடுப்போம்: அமெ.வுக்கு வடகொரியா மிரட்டல்

போர் மூலம் பதிலடி கொடுப்போம்: அமெ.வுக்கு வடகொரியா மிரட்டல்

/ Thursday, 12 October 2017 10:23
வடகொரியா பகுதிகளில் அமெரிக்க இராணுவ விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து 'அமெரிக்காவுக்கு போர் மூலம் பதிலடி கொடுப்போம்" என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
 
மெரிக்காவைத் தாக்குவதற்குத் தயாராகி வருவதாக வடகொரியா ஏற்கனவே அறிவித்தது. இதனால் கோபமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஐ.நா.வில் பேசும்போது, வடகொரியாவைக் கடுமையாக எச்சரித்ததோடு, 'அந்நாட்டையே அழித்துவிடுவோம்.என்றார்.
 
இந்நிலையில், அமெரிக்கா தற்போது கொரிய தீபகற்ப பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க இராணுவ விமானங்கள் வடகொரியாவை ஒட்டியுள்ள பகுதிகளில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
'டிரம்ப் ஏற்கனவே வடகொரியாவைக் கடுமையாக மிரட்டியுள்ளார். நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் எங்கள் பதிலடியை போர் மூலம் அவர்களுக்கு காட்டுவோம். அதற்குத் தயாராகி விட்டோம்.
 
டிரம்ப் மனநிலை பாதித்தவர்போல் செயற்படுகிறார். இதனால் தான் எங்களை மிரட்டுவதற்காக ஒத்திகை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவை விட மாட்டோம்"என்றார்.

Please publish modules in offcanvas position.