விசில் சின்னத்தில் விஷால் தேர்தலில்

விசில் சின்னத்தில் விஷால் தேர்தலில்

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

திடீரென அரசியல் குதித்துள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுமார் 300 ஆதரவாளர்கள் புடைசூழ மோட்டார் பைக்கில் தண்டையார் பேட்டை அலுவலகத்திற்கு வந்தார்.

ஏற்கனவே, அங்கு சுயேட்சைகள் குவிந்துள்ளதால், விஷால் வரிசையில் வர வேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதனால், அவர் வரிசையில் வேட்புமனுவை தாக்கல் செய்யதுள்ளளார்.

தனக்கு விசில் சின்னம் வேண்டும் என வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top