ஒஸ்கார் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் கதாநாயகனாக அவதாரம்

ஒஸ்கார் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி. தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத் திருக்கிறார். இவர் நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.

பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக் குட்டி நடித்துள்ளார்.

இயக்குனர் பிரசாத் பிரபாகரன் இதுபற்றி கூறும் போது...
“ ஹொலிவுட், பொலிவுட் சேர்ந்த 80-க்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை பதிவு செய்வதில் பணிபுரிந்தனர். 22 கமராக்களை கொண்டு அந்த விழாவில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம்.

ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் - டிரைலரை ஆண்டனி எடிட் செய்துள்ளார்.

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top