சீன - சிங்கப்பூர் உடன்படிக்கைகள் இறக்குமதியை அதிகரிக்கும்

சீன - சிங்கப்பூர் உடன்படிக்கைகள் இறக்குமதியை அதிகரிக்கும்

/ Wednesday, 11 October 2017 10:45

சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைகளால் சுங்கத் தீர்வையற்ற இறக்குமதி விரிவாகும் என்று உலக வர்த்தக மையத்தின் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் பிரிவின் தலைவர் டொக்டர் ரோகினி ஆச்சார்ய தெரிவித்துள்ளார்.

‘உலக வர்த்தக மையமும், பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகளும்’ என்ற தலைப்பில் கொழும்பில் நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையின் இறக்குமதியில் 51 சதவீதப் பொருட்கள் பூச்சிய இறக்குமதி வரிகளைக் கொண்டுள்ளன.

சீனா, சிங்கப்பூர் உடனான வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், இறக்குமதி வரிகள் 75 சதவீதம் பூச்சியமாகுவதுடன், இலங்கையின் இறக்குமதிப் பொருட்களின் தீர்வையற்ற வரிகளின் கொள்ளளவு அதிகரிப்பதோடு வருடாந்த இறக்குமதியின் வீதமும் உயர்வடையும்“ என்றும் கூறினார்.

Please publish modules in offcanvas position.